பிரதான செய்திகள்

மே மாதம் முதல் புதிய அரசியல் செயற்றிட்டம் – ஜனாதிபதி

மே மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் புதிதாக பல அரசியல் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மெதிரிகிரிய பகுதியில் நீர் விநியோகத் திட்டமொன்றை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் புதிய அரசியல் செயற்றிட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டினதும் மக்களினதும் நலன்கருதி புதிய அரசியல் தீர்மானங்களை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளை பெரியபள்ளிவாசல் வழிநடத்த வேண்டும் -நவவி

wpengine

பஸ்ஸில் பெண்ணை தாக்கிய பௌத்த பிக்கு! கைது

wpengine

கிண்ணியா பிரதேச சபை ACMC வசமானது!

Maash