பிரதான செய்திகள்

முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுக் கூட்டம்! ஊடகத்துறை பிரதியமைச்சர் பங்கேற்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி காலை 9.00 மணிக்கு கொழும்பு – 10. அல் ஹிதாயா கல்லூரியின் எம். சி பஹார்தீன் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், ஊடகத்துறை பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவித்தாரன பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

இந்த மாநாட்டின் போது முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் மீடியா போரத்தின் 2016/2018ஆம் ஆண்டிற்கான நிறைவேற்றுக் குழுவின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொதுச் செயலாளராக ஸாதிக் ஷிஹான் மற்றும் பொருளாளராக எம். இஸட் அஹ்மத் முனவ்வர் ஆகியோர் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேற்குறிப்பிடப்பட்டுள்ள மூன்று பிரதான பதவிகளுக்கும் போட்டிகள் இன்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதாக நியமனக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 30 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு, பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளது.

போட்டியிடுவோர் விபரம் பின்வருமாறு :-

எம். ஏ. எம். நிலாம், ரஷீத் எம் ஹபீழ், தாஹா முஸம்மில், கலைவாதி கலீல், திருமதி புர்கான் பீ இப்திகார், ஹனீபா எம் பாயிஸ், இர்ஷாட் ஏ. காதர், ஜாவிட் முனவ்வர், மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா, எஸ். ஏ. அஸ்கர் கான், எம். கே. முபாரக் அலி, ஜெம்ஸித் அஸீஸ், எம். பி. எம். பைறூஸ், ஏ. ஜே. எம். பிரோஸ், எம். எப். ரியாஸ், ஏ. எஸ். எம். யாஸீம், திருமதி மும்தாஸ் ஸரூக், எஸ். எல். அஸீஸ், ஏ. ஏ. எம். பஸ்லி, மௌலவி எம். எஸ். எம். மஸாஹிம், டி. கே. எம். ரிஸ்வி, திருமதி ஸமீஹா ஸபீர், எஸ். ஐ. எம். மின்ஸார், நுஸ்கி முக்தார், எம். எல் லாபிர், எஸ். எம். ஹிஷாம், எம். ராபி, எம். எஸ். எம். ஸாஹிர், திருமதி எஸ். ஷாமிலா மற்றும் எஸ். எம். சர்ஜான்.

Related posts

அமைச்சர் றிஷாட்டிடம் தோற்றுபோன ஞானசார தேரர்

wpengine

ஆட வந்த சிங்கள மாணவர்களை ‘வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்’

wpengine

பாணின் விலை அதிகரிப்பிற்கான காரணம் நிதியமைச்சர் ரவி

wpengine