பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

முல்லைத்தீவில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமி

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கேப்பாபுலவு பகுதியில் குடும்பத் தகராற்றில் தந்தையால் வெட்டப்பட்ட சிறுமியொருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி இடம்பெற்றுள்ள நிலையில், 5 வயதுடைய சிறுமியொருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவத்தினை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தையான 28 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

Related posts

இலஞ்சம் பெற்ற 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலன்னறுவையில் கைது!

Editor

அணி மாறுவது பற்றி கூற வைகோவிற்குத் தகுதி இல்லை: சாடும் ஜவாஹிருல்லா

wpengine

பழுதடைந்த உணவுகளை மாணவர்களுக்கு வழங்கும் வவுனியா பாடசாலை

wpengine