பிரதான செய்திகள்

முதல் தடவையாக மன்னாரில் ஆசிரியர் மாநாடு

மன்னார் மண்ணில் முதல் தடவையாக மன்னார் கல்வி வலயம் பெருமையுடன் நடாத்துகின்ற ஆசிரியர் மாநாடு-2016 இலங்கையின் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆசிரியர் மாநாடுகளை
நடாத்தி வருகின்றது அந்த வகையில் வடமாகாணத்தில் உள்ள 12 வலயங்களும் ஆசிரியர் மாநாடு வெகுசிறப்பாக நடாத்துகின்றது.

மன்னார் வலயம்,நானாட்டான்,முசலி இம்மூன்று பிரதேசங்களையும் உள்ளடக்கியதாக மன்னார் வலயமும் இரண்டு நாள் நிகழ்வாக சிறப்பிக்கவிருக்கின்றது.

ஆசிரியர் மாநாடு ஆனது ஆசிரியர்களின் சேவையை பாராட்டி கௌரவிப்பதோடும் அவர்களின்
திறமையினை ஆளுமையினை வெளிப்படுத்தி முதன்மைப்படுத்தும் முக்கியமான நிகழ்வாகும். இவ்விரண்டு நாள் நிகழ்விலும் ஆசிரியர்களின் முழுமையான பங்களிப்பே செயல் திறன்
மிக்கதாக அமையும்.

இன் நிகழ்வு மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.செலின் சுகந்தி செபஸ்ரியன்
தலைமையில் இடம்பெறும்.

இடங்கள்

மன்-புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி (தே.பா)

மன்-சித்திவிநாயகர் இந்துக்கல்லூரி (தே.பா)

மன்-அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயம் (தே.பா)

நேரம்-மு.ப.8-30-பி.ப.5.30 வரை
காலம்-14-15-06-2016 (இரண்டு நாள் நிகழ்வு)

d3df0d01-58d6-4234-bddf-309ae61e1a1d

Related posts

நாட்டின் எதிர்கால அபிவிருத்திக்காக தேசிய பௌதீக திட்டம் முன்னெடுப்பு!

Editor

வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரனுக்கு அழைப்பு விடுத்த கட்சி

wpengine

நாளை மன்னார் சாரதிகளுக்கு பி.சி.ஆர் பரிசோனை

wpengine