பிரதான செய்திகள்

முசம்மில் மீது மரிக்கார் குற்றச்சாட்டு! குப்பைகள் அகற்றவில்லை

கொலன்னாவ பிரதேசத்தில் 180 அடி உயரத்திற்கு கழிவுப் பொருட்கள் குவிந்துள்ளன.

அது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியால் கொழும்பு மாநகர சபைக்கு அறிவிக்கப்பட்டது.

எனினும் இதுவரையில் எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் குற்றம்சுமத்தியுள்ளார்

இ்ன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்தவிடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தில் சிலரின் ஒத்துழைப்புடன் கொழும்பு நகருக்கு கழிவுப் பொருட்களை எடுத்து வந்து இட்டதாகவும், கொலன்னாவை மக்களின் துன்பியல் நிலைமை தொடர்பாக அப்போதைய நகராதிபதி ஏ.ஜே.எம்.முசம்மில் அசமந்தமாக செயற்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

கொழும்பு மாநகரத்தின் கழிவுப்பொருட்கள் மீதொட்டமுல்ல பிரதேசத்தில் கொட்டப்படுவதே கொலன்னாவை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் பொதுமக்களின் துன்பியல் நிலைமையாக மாறியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

அபிவிருத்திப் பாதையை நோக்கி தில்லையடி அல்ஜித்தா கிராமம்

wpengine

நாளை ஆட்சி மாற்றம் இடம்பெற்றால் காப்பாற்ற எவரும் வரமாட்டார்கள்.

wpengine

உதா கம்மான (கிராம எழுச்சி) வெலிஓயாவில் ஆரம்பித்து வைத்த சஜித்

wpengine