பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மாவீரர் தினத்தை தடுக்கும் கோரிக்கை மன்னார் நீதி மன்றத்தில் நிராகரிப்பு

மன்னாரில் நாளை (27) சனிக்கிழமை மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(26)    மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.  

தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

அதனால், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப- தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில், இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26)   விண்ணப்பம் செய்யப்பட்டது.

இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள்   மன்றில் சமர்ப்பிக்கப்படாமையினால்  , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார்  நிராகரித்தார்.

Related posts

வெளிநாட்டு தூதுவர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற நட்புறவுச் சங்கங்களில் வாக்கெடுப்பு நடத்துமாறு கோரிக்கை.

Maash

“சு.கா வின் இருட்டறை இரகசியங்கள்”. முஸ்லிம் ஆளுமைகள் சுழியோடுமா?

wpengine

பத்தொன்பதைப் பழிவாங்கும் “எக்ஸிகியூடிவ்” மனப்பாங்கு

wpengine