பிரதான செய்திகள்

மாயக்கல்லி மலை புத்தர் சிலை விவகாரம்: குழுவொன்றை அமைக்க கோரிக்கை

எதிர்வரும் 21ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வில் அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மாயக்கல்லி மலையில் அமைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் ஆணைக்குழு ஒன்றை அமைக்குமாறு கோரும் பிரேரணை, தன்னால் சமர்ப்பிக்கப்படவிருப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதவாது,

“கடந்த 2016.10.27ம் திகதி பௌத்த மக்கள் எவரும் வாழாத இறக்காமப் பிரதேசத்தின் மாயக்கல்லி மலையில் ஒரு சில பௌத்த துறவிகளால் சிலையொன்று அமைக்கப்பட்ட பொழுது, அவ்விடத்தில் சமாதானக் குழைவு ஏற்பட்டிருந்தது.

தற்பொழுது, இந்த மலையின் அடிவாரத்தில் இருக்கின்ற முஸ்லிம்களுக்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ள காணியில், எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என, இறக்காமம் பிரதேச செயலாளர் காணிச் சொந்தக்காரர்களுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

அக் காணியினை பௌத்த விகாரை அமைப்பதற்கு வழங்க வேண்டும் என்ற ஒரு சில செல்வாக்குடன் கூடிய அழுத்தத்தின் காரணமாகவே பிரதேச செயலாளர் இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார் என அறிய முடிகிறது.

இந்நிலை தொடர்ந்து செல்ல அனுமதிப்பதனால் இப் பிரதேசத்தில் இனமுறுகல் தோன்றக்கூடிய சாத்தியப்பாடு எழலாம்.

ஆகையினால் நாட்டின் பிரஜைகளுக்கு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக அரசினால் வழங்கப்பட்ட காணிகளில் மதஸ்தானங்களை அமைப்பது தொடர்பான சட்ட இயைபு போன்ற விடயங்களை ஆராய்வதற்கும், அவற்றை இனமுறுகல் ஏற்படாமல் தவிர்த்து தடை செய்வதற்கு அல்லது ஒழுங்கு செய்வதற்கும் என கிழக்கு மாகாண சபையானது, இச்சபையின் உறுப்பினர்களையும் மேற்படி விவகாரத்துடன் தொடர்புபட்ட உத்தியோகத்தர்களையும் உள்ளடக்கிய ஆணைக்குழுவொன்றினை உருவாக்குமாறு கோரி இப்பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளேன்” என்றார்.

Related posts

இணையதள வாசகர்கள் அனைவருக்கும் இனிய நத்தார் தின நல்வாழ்த்துக்கள்.!

wpengine

இலங்கை மீது அமெரிக்கா கடும் நிபந்தனை

wpengine

நடிகை நயன்தாராவுக்கு ஆதரவாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

wpengine