பிரதான செய்திகள்

மாந்தை கிழக்குப்பிரதேச சபை கட்டடத்தை திறந்து வைத்த விக்கி,ஆனந்தி

வடக்கு கிழக்கு உள்ளூர் சேவைகள் மேம்படுத்தும் நிதியின் கீழ் 17.711 மில்லியன் ரூபா செலவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மாந்தை கிழக்குப் பிதேச சபைக்கான புதிய கட்டிடத் தொகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் முதன்மை விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு வைபரீதியாக புதிய கட்டிடத்தினை திறந்து வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட போதும் அவரின் சார்பாக புதிய அமைச்சர்களில் ஒருவரான அனந்தி சசிதரன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தினை திறந்து வைத்துள்ளார்.

இதேவேளை இணைய வழி நூலக சேவையும் வடமாகாண சபையின் மகளிர் விவகாரம் சமூக சேவைகள் புனர்நிர்மாண அமைச்சர் அனந்தி சசிதரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 

மேலும், இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன், க. சிவநேசன், எம்.கே.சிவாஜிலிங்கம், கமலேஸ்வரன் மற்றும் உள்ளுராட்சி திணைக்கள அதிகாரிகள், பாடசாலை, அதிபர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Related posts

கிளிநொச்சியில் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Maash

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கையை பலப்படுத்துவோம் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப்

wpengine

றிஷாட்,மனோ,கூட்டமைப்பு தரப்புக்கள் வாக்களிக்கவில்லை-டலஸ்

wpengine