பிரதான செய்திகள்

மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


ஹொரனை பிரதேசத்தில் பாடசாலையின் அதிபர் மற்றும் வகுப்பு ஆசிரியரினால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில் இங்கிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவர் வேறு நிறத்திலான காற்சட்டை அணிந்திருந்தாக குற்றம் சாட்டி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்போது காற்சட்டையும் கிழிக்கப்பட்டுள்ளது.

தான் உணவருந்திக் கொண்டிருந்த போது அதிபர் அங்கு வந்து தாக்குதலை மேற்கொண்டதாக மாணவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவனுக்கு புதிய காற்சட்டை கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லாமையினால் அந்த காற்சட்டையை அணிந்து அனுப்பியதாக மாணவனின் தாயார் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

Related posts

முல்லைத்தீவில் முதல் முறையாக இலங்கை தேசிய புதியவர்கள் பிரிவினருக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டி!

Maash

கடற்படையினரால் தாக்கப்பட்ட மன்னார் மீனவர்கள் முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர்!

Editor

500 பாலங்களை நிர்மாணிக்க உள்ளுராட்சி அமைச்சு ஒப்பந்தம்

wpengine