பிரதான செய்திகள்

மஹிந்தவின் கனவு ஒருபோதும் நிறைவேறாது!

மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் காணும் கனவு ஒருபோதும் நிறைவேறாதது என, அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
சிறு குழுக்கள் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை மாற்ற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரம் பிரதேசத்திற்கு சென்றிருந்த அமைச்சர் பாலித ரங்கேபண்டார, ஊடகங்களுக்கு கருத்து வௌியிட்ட போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாரிய ஊழல் மற்றும் மோசடிகளுடன் தொடர்புபட்ட குழுக்களை கைதுசெய்வதாக கூறியே தற்போதைய அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தது, எனினும் அவை நிறைவேற்றப்படாதது ஏன் என இதன்போது எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

“யார் கூறியது கைதுசெய்யவில்லை என, இந்த குற்றங்களை இழைத்திருப்பவர்கள் சிறு மனிதர்கள் அல்ல. தம்மை காக்க பாதையை அமைத்த பின்னே அவர்கள் இவற்றை செய்துள்ளனர். எனவே வெற்றிகரமாக இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.” என்றார்.

Related posts

கடந்த 10 நாட்களில் 1300 மில்லியன் வருமானம் ஈட்டிய இ.போ.ச

Maash

மட்டக்களப்பில் சட்டவிரோத மண் அகழ்வு! ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்

wpengine

கல்குடாத் தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் கவனத்திற்கு

wpengine