பிரதான செய்திகள்

மஹிந்த அணியில் அமைச்சர் றிஷாட் இணைந்துகொள்ள சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் அழைப்பு

அமைச்சர் ரிசாட் பதியூதீனை தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கூட்டு எதிர்க்கட்சி அழைப்பு விடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்து அமைச்சர் ரிசாட் பதியூதீன் இதனை கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் நேற்றிரவு நடைபெற்ற விவாதத்தில் மேற்படி விடயத்தை அலவத்துவல சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சர் ரிசாட்டுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை தாமதப்படுத்தவோ, கொண்டு வர வேண்டாம் என்றோ கூற போவதில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரல் பற்றி பேசிய போதிலும் நம்பிக்கையில்லா பிரேரணை பற்றி கூடிய கவனம் செலுத்தவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை அமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க போவதாக அமைச்சர் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் நிவாரண விலையில் -கைத்தொழில் ,வர்த்தக அமைச்சு

wpengine

ஹக்கீமை பொறுத்தவரையில் அவரின் மரணத்துடன் கட்சியும் மரணிக்க வேண்டும்

wpengine

அம்பாறை ஆட்சியமைப்பதில் றிஷாட்டிடம் தோற்றுப்போன ஹக்கீம்

wpengine