பிரதான செய்திகள்

மரங்களை காணவில்லை முன்னால் அமைச்சர் பொலிஸ் முறைப்பாடு

முன்னாள் அமைச்சருக்கு சொந்தமான இரண்டு மாஹோகனி மரங்களை திருட்டுத்தனமாக வெட்டிய நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக வெலிபென்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான குமார் வெல்கமவிற்கு சொந்தமான காணியில் சுமார் 55 ஆயிரம் ரூபா பெறுமதியான இரண்டு மாஹோகனி மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.

வெலிபென்ன 5 கட்டை பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான காணியில் இருந்த இரண்டு மாஹோகனி மரங்கள் களவாடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இதற்கு அமைய விசாரணைகளை நடத்திய பொலிஸார் ஒரு சந்தேக நபரை கைது செய்ததுடன் மர ஆலை ஒன்றில் இருந்த மாஹோகனி மரக்கட்டைகள் சிலவற்றை கைப்பற்றியுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை கைது செய்யவும் மரங்களை ஏற்றிச் சென்ற வாகனத்தை கைப்பற்றவும் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் திருடப்பட்ட மாஹோகனி மரங்களில் விலையை மதிப்பீடு செய்ய அறிக்கை ஒன்றை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாஹோகனி என்ற வகை மரங்கள் மரத்தளப்பாடங்களை செய்வதற்காக வளர்க்கப்படும் மரங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சுடர் ஒளிப்பத்திரிகையில் வெளிவந்த செய்திக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – அமீர் அலி

wpengine

எனது வாழ்க்கை இந்த பாராளுமன்றம் தான்! ஒரு கௌரவம் கிடைத்துள்ளமை மிகுந்த மகிழ்ச்சி

wpengine

மனைவியினை தாக்கிய கணவன்! விளக்கமறியல்

wpengine