பிரதான செய்திகள்

மன்னார் டிப்போ ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன்

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் பஸ் டிப்போ ஊழியர்கள் இன்று பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மன்னார் டிப்போவிற்கான கணக்காளர் அலுவலகம் ஒன்றை அமைத்து தருமாறு வலியுறுத்தி இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தமக்கான கணக்காளர் அலுவலகம் வவுனியாவில் காணப்படுவதால், தங்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மன்னார் டிப்போ ஊழியர்கள் குறிப்பிடுகின்றனர்.40174935-d217-4268-b446-ea084b5f311f

இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் டிப்போ ஊழியர்களின் கோரிக்கை தொடர்பில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்ரமணியம் டெனிஷ்வரனிடம் வன்னி நியூஸ் செய்தி பிரிவினர் வினவிய போது ஊழியர்களின் கோரிக்கை நியாயமானது என குறிப்பிட்ட வட மாகாண போக்குவரத்து அமைச்சர், அந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கை எடுப்பதாவும், விரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் கூறினார்.

மேலும் தெரிவிக்கையில் பாடசாலை மாணவர்கள் ,அரச அதிகாரிகள் மற்றும் நோயாளிகள் பல்வேறு சிறமங்களை எதிர்நோக்கி உள்ளார்கள். ஆகவே தொழில் சங்கங்கள் எடுத்த உடனே இப்படியான போராட்டங்களை முன்னேடுக்க கூடாது  எனவும் தெரிவித்தார்.

Related posts

பூநகரி பிரதேசத்தில் சட்டவீரோத மரம் கடத்தல்! வனவள அதிகாரி தாக்குதல்

wpengine

புத்தளத்தில் உள்ள சிறுநீரக நோயாளி எம்.எச்.எம்.ஹலீல் அவர்களுக்கு உதவுவோம்…!

wpengine

முஸ்லீம்களின் ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும், அவர்களுடைய மார்க்கம்

wpengine