பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

மன்னார்- கண்டி பஸ்ஸில் முதியோர் திடீர் மரணம்

மன்னாரில் இருந்து கண்டி நோக்கி இன்று (19) காலை இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்றில் பயணித்த வயோதிபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

மன்னார் புதிய பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்து ஒன்று இன்று காலை 5.30 மணியளவில் பயணிகளுடன் கண்டி நோக்கி பயணித்துள்ளது.

இதன் போது குறித்த பேரூந்தில் குறித்த வயோதிபரும் பயணித்துள்ளார்.

இதன் போது மன்னார் பிரதான பாலத்தடியில் உள்ள இராணுவ சோதனைச்சாவடியில் குறித்த பேரூந்து சோதனைக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.

உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டில் கல்விக் கட்டமைப்பை மாற்றியமைக்க ‘கல்வி பேரவை’ ஒன்றை நிறுவ அரசாங்கம் தயார் . !

Maash

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது: பெப்ரல் அமைப்பு கண்டனம்

wpengine

இரவில் மஹிந்தவை சந்தித்த இராஜாங்க அமைச்சர்

wpengine