பிரதான செய்திகள்

மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளராக சிப்லி பாரூக் நியமனம்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீலங்கா ஷிபா பவுண்டேஷனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி ரவூப் ஹக்கீமினால் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மட்டக்களப்பு தொகுதிக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

 

2017.10.15ஆந்திகதி – ஞாயிற்றுக்கிழமை இன்று காத்தான்குடியில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போது இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

 
கட்சி முக்கியஸ்தர்களுடனான இக்கலந்துரையாடலின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். சட்டத்தரணி ரவூப் ஹக்கீம், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான கௌரவ. அல்ஹாஜ். நஸீர் அஹமட், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அல்ஹாஜ். அலிசாஹிர் மொலானா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான கௌரவ. அல்ஹாஜ். யு.எல்.எம்.என். முபீன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத்தொகுதி அமைப்பாளர் அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

wpengine

றிஷாட் மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கும் மலையக மக்கள் முன்னணி ஆதரவு வழங்காது

wpengine

ஏன் முஸ்லிம் காங்கிரசினால் ஆட்சியமைக்க முடியவில்லை ?

wpengine