பிரதான செய்திகள்

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்ய வேண்டும் – கொள்கைக்கு ஆதரவளிக்க வேண்டும்

மக்கள் உள்ளாடைகளை அணியாமல் தியாகம் செய்யவேண்டும் இதன் மூலம் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைக்கு ஆதரவளிக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபயசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.


அத்தியாவசியமற்ற 623 இறக்குமதி பொருட்களிற்கு 100 வீத உத்தரவாத பண வைப்பீட்டை அமுல்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


உள்ளாடைகளும் அத்தியாவசியமற்ற பொருட்களிற்குள் அடங்குகின்றன பொதுமக்கள் அவற்றை அணிவதை தவிர்க்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


நாங்கள் எதிர்காலத்தில் உள்ளாடைகளை அணியாமல் தியாகங்களை மேற்கொள்ளவேண்டும்,இதன் மூலம் நாங்கள் ஜனாதிபதியின் பொருளாதார கொள்கை திட்டத்திற்கு ஆதரவளிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


பொதுமக்கள் அரசாங்கத்திற்காக அந்த தியாகத்தை செய்து இன்றுமுதல் உள்ளாடைகளை அணிவதை தவிர்ப்பார்கள் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

இத்தாலியின் பின்பு தற்போது மியான்மாரில் பாரிய பூமியதிர்ச்சி

wpengine

22 மக்கள் வங்கி சேவை மத்திய நிலையங்கள் இன்று முதல் மூடல்

wpengine

நாவலடி, மேவான்குளம் பிரதேசத்தில் மக்கள் மீள்குடியேறுவதற்கு அமைச்சர் றிஷாட் உதவி

wpengine