பிரதான செய்திகள்

பௌத்த விகாரைகளை மறுசீரமைக்க முன்னுரிமை விஜேதாச ராஜபக்ஷ

இயற்கை அனர்த்தங்கள் காரணமாக சேதமடைந்துள்ள பௌத்த விகாரைகளை மறுசீரமைக்க அரசாங்கம் முன்னுரிமையளித்துச் செயற்படவுள்ளது.

நீதி மற்றும் பௌத்த சாசன அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அமைச்சின் செயலாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக சேதமடைந்த விகாரைகளின் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. பிரதேச செயலகங்கள் மற்றும் பௌத்த பிக்குகள் ஊடாக குறித்த தகவல்கள் திரட்டிக் கொள்ளப்படவுள்ளது.

பின்னர் நீண்டகால மற்றும் குறுகிய கால செயற்திட்டங்களின் அடிப்படையில் குறித்த விகாரைகளை மறுசீரமைப்பதற்கு பௌத்த சாசன அமைச்சின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கான நிதியுதவிகள் மற்றும் ஏனைய தேவைகளை அமைச்சின் ஊடாக வழங்கி வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய மத வழிபாட்டுத்தலங்கள் குறித்து அரசாங்கம் எதுவித கவனமும் செலுத்தியதாகத் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

கிழக்கில் சாணக்கியனும் வடக்கில் சுமந்திரனும் பெரிய போராட்டங்களை செய்து படம் காட்டினார்கள்

wpengine

பால்மாவில் பன்றி எண்ணெய் கலப்படம் செய்யப்படவில்லை

wpengine

உரம் இன்றி பயிர்களுக்கு ஏற்படும் சேதங்களுள் நெற்செய்கைக்கு மாத்திரமே நட்டஈடு-மஹிந்தானந்த அளுத்கமகே

wpengine