பிரதான செய்திகள்

பௌத்த மதத்திற்கு உயிரை கொடுக்கும் முஸ்லிம் அமைச்சர் ஹபீர்

சிங்கள பௌத்த மக்களின் கோரிக்கைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சி இதனை விடவும் அவதானம் செலுத்த வேண்டும் என அக்கட்சியின் தலைவர் அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கேகாலையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

நான் ஒரு முஸ்லிம். இருந்தாலும், பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமையை நாம் உயிரைக் கொடுத்தேனும் பாதுகாப்போம்.

இந்த நாட்டின் ஒருமைப்பாட்டை அழிப்பதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். எமது குறைபாடுகள் இருக்கலாம். எமது தவறுகள் அதிகம் உள்ளன.

இந்த நாட்டிலுள்ள சிங்கள பௌத்த மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் நாம் ஐக்கிய தேசியக் கட்சி என்ற வகையில் இதனை விடவும் நெகிழ்ந்து கொடுத்திருக்க வேண்டும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

நம்பிக்கையில்லாப் பிரேரனை ஊடாக பாடம் எடுக்கும் மஹிந்த

wpengine

தாமரை மொட்டுடின் உதவியுடன் முஜாஹிர் மன்னார் பிரதேச தவிசாளர்

wpengine

புத்தளம் பள்ளிவாசலுக்கு அருகாமையில் 15 வயது சிறுவன் கொலை

wpengine