Breaking
Sat. Apr 20th, 2024

விவசாய நீர்ப்பாசனம், கிராமிய அபிவிருத்தி அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, வவுனியாவுக்கு நேற்று (12) விஜயம் மேற்கொண்டார்.

வவுனியா – போகஸ்வெவ பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அவர், அப்பகுதியில் உள்ள மகாகம்பிலிவெவ குளத்தின் புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந்தக் குளமானது, 32 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ளதுடன், அதன் மூலம் 400 ஏக்கர் வரையிலான விவசாயச் செய்கையை முன்னெடுக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் சமல் ராஜபக்‌ஷ, இக்குளத்தைப் புனரமைப்பதன் மூலம், இரு போகங்களுக்கு மாத்திரம் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு அப்பால் 12 மாதங்களும் இந்த மக்கள் தமக்கான உணவுத்தேவையை பூரணப்படுத்தக்கூடியதாக இருக்குமென்றார்.

“மகாவலி “எல்” வலயத்தில் இந்தப் பகுதி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் மகாவலி நீர் எப்போது வரும் என்று கோரிக்கை முன்வைக்கின்றனர். அதனையும் கருத்திற்கொண்டே இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” எனவும், அவர் கூறினார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *