தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

போலியான செய்தி! மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை

சமூக ஊடகங்களின் வழியாக பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
சமூக ஊடகங்களின் ஊடாக போலியான பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இவ்வாறான போலிப் பிரச்சாரங்களினால் மக்கள் பீதியடைவதுடன் பாதுகாப்புத் தரப்பினர் பிழையாக வழிநடத்தப்படுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே போலியான செய்திகளை பரப்புவோருக்கு எதிராக அவசரகாலச் சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளி என நிரூபிக்கப்படும் நபர்களுக்கு மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Related posts

இராஜினாமா செய்யவுள்ள திலங்க சுமதிபால

wpengine

ஏறாவூர் சம்பவம்! கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த கடிதம்

wpengine

கருணாவை விட தமிழ் கூட்டமைப்பு படுமோசமானது

wpengine