Breaking
Tue. May 7th, 2024

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்த அறிக்கையை தான் பேஸ்புக்கில் பார்த்தே அறிந்துக்கொண்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடைபெற்ற போது தான் சிங்கப்பூரில் இருந்ததாகவும் தனது நண்பர் அந்த கடிதத்தை காண்பித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் அரச புலனாய்வு சேவை, புலனாய்வு தொடர்பான அறிக்கைகளை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு மட்டுமே அனுப்புவது நடைமுறையில் இருந்து வருகிறது.

எனினும் முப்படை தளபதியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜனாதிபதிக்கு புலனாய்வு அறிக்கை அனுப்பப்படவில்லை என்பது பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

அத்துடன் கடந்த ஆறு மாதங்களாக தேசிய பாதுகாப்புச் சபை கூட்டப்படவில்லை. பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி தலைமையிலேயே பாதுகாப்புச் சபை கூட்டப்படும்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தான் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து நாட்டில் நடக்கும் முக்கிய சம்பவங்கள் தொடர்பான விடயங்களை பத்திரிகைகளில் பார்த்தே அறிந்துக்கொள்வதாக ஏற்கனவே கூறியிருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன, புலனாய்வுப் பிரிவின் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை எனக் கூறுவது விசனத்திற்குரியது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *