பிரதான செய்திகள்

போரை முடிவிற்கு கொண்டு வந்த தனக்கு வரியை குறைப்பது பெரிய விடயம் கிடையாது மஹிந்த

போரை முடிவிற்கு கொண்டு வந்த தனக்கு வரியை குறைப்பது பெரிய விடயம் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

நூற்றுக்கு இருபது வீதத்தினால் வரியை குறைக்குமாறு என்னிடம் சவால் விடுக்கும் தரப்பினர் கடந்த காலங்களில் போரை முடிவிற்கு கொண்டு வருமாறு என்னிடம் சவால் விடுத்திருந்தனர்.

இந்த தரப்பினர் நான் போரை முடிவுக்குக் கொண்டு வருவேன் என நினைக்கவில்லை.

நான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த காரணத்தினால் இன்று அவர்கள் வடக்கு, கிழக்கிற்கு பயமின்றி செல்கின்றனர். எமது படையினர் உயிரைத் தியாகம் செய்து தாய் நாட்டை மீட்டெடுத்தனர்.

வரியை குறைக்குமாறு எனக்கு சவால் விடுக்கும் தரப்பினர் முதலில் சவால்களை எவ்வாறு எதிநோக்குவது என்பதனை கற்றுக்கொள்ள வேண்டும்.

போரையே முடிவுக்குக் கொண்டு வந்த எனக்கு வரியை 20 வீதத்தினால் குறைப்பது பெரிய விடயமன்று என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சில மாதங்களில் அவசர மருந்து கொள்வனவை நிறுத்த நடவடிக்கை!

Editor

மன்னாரை சேர்ந்த இளம் பெண் மரணம்! பலர் சோகத்தில்

wpengine

தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் முஸ்லிம்கள் வாழும் கணேவத்தைக்கு சென்றுள்ளார்.

wpengine