தொழில்நூட்பம்பிரதான செய்திகள்

பேஸ்புக் தடை! தொடரும் முறைப்பாடு

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதிக்கப்பட்டமைக்கு எதிரான முறைப்பாடுகள் அதிகரித்து வருகின்றன.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு இதனைத் தெரிவித்துள்ளது.

கண்டி வன்முறை சம்பவங்களைக் கருத்திற் கொண்டு இந்த தடை விதிக்கப்பட்டிருந்தநிலையில், தடை இன்னும் நீக்கப்படவில்லை.

இதன் ஊடாக மக்களின் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பல்வேறு தரப்பினரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்து வருகின்றனர்.

இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கம் முதலில் கடந்த வாரம் இந்த முறைப்பாட்டை பதிவு செய்திருந்தது.

இன்றையதினம் சட்டத்தரணிகளது ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இதற்கு எதிராக முறைப்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கோடியில் மடுவம் கட்டியது அழகு பார்க்கவா?

wpengine

மன்னாரில் கஞ்சா மூடி மறைக்கும் பொலிஸ் அதிகாரிகள்

wpengine

ரணில் தலைமையில் ஜனநாயகம், நல்லிணக்கம் ஏற்படுத்தவும் முடியாது

wpengine