Breaking
Sat. May 18th, 2024

முன்னதாக, இந்தியாவுக்கு பதிலடி தருவதற்கு நேரமும், இடமும் முடிவு செய்யப்படும் எனவும் இந்திய விமான படைகளுக்கு எதிராக சரியான நேரத்தில் எதிர்வினையாற்றிய பாகிஸ்தானிய விமானபடைக்கும் வாழ்த்தும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முகாமை குறி வைத்து செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்தியா தாக்குதல் நடத்தியதாக இந்திய வெளியுறவுச் செயலர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபார் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றினை ஏற்பாடு செய்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவை நாங்கள் திகைப்பிற்கு உள்ளாக்குவோம், எங்களின் பதிலடி வேறு விதமாக இருக்கும் மேலும் எங்களின் பதிலடிக்கு காத்திருங்கள்.
நாங்கள் ஆச்சிரியப்படவில்லை, எங்களின் பதிலடியை பார்க்கதான் போகிறீர்கள் இதே வேளை எங்களுக்கு அமைதியின் மீதும் நம்பிக்கையுள்ளது.

ஜப்பாவில் இந்தியா விமானப்படை தாக்கியதை ஒப்புக் கொண்ட அவர். அதே நேரம் இந்தியா கூறியது போல யாரும் உயிரிழக்கவில்லை என்றும் கூறி உள்ளார். நாங்கள் ஜனநாயகவாதிகள்.

நீங்கள் அவ்வாறானவர்கள் இல்லை என்று நிரூபித்துள்ளீர்கள் என்றும் அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். “ஆனால், பாகிஸ்தான் இந்தத் தாக்குதலால் திகைத்துப் போய்விடவில்லை.

தயாராகவே இருந்தோம். அதற்கு சரியாக பதிலடியும் கொடுத்தோம்”
“இந்திய ராணுவம் 21 நிமிடங்கள் தாக்குதல் நடத்தி 350 பயங்கரவாதிகளை கொன்றதாக கூறுகிறது. ஆனால், யாரும் மரணிக்கவில்லை. இந்தியாவின் கூற்று முற்றிலும் தவறானது.

ராஜாங்க ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் இந்த பதிலடி மும்முனைகளிலும் இருக்கும். ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தி் முகாம் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறி இந்தியா வெளியிட்டுள்ள புகைப்படம், மூன்று ஆண்டுகளாக யு-டியூப்பில் உள்ளது.

மேலும், இரவு நேரத்தில் இந்திய விமானங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பட்சத்தில், எப்படி அந்தப் படம் அவ்வளவு தெளிவாக இருக்கிறது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் “எங்கள் பதிலடி வித்தியாசமாக இருக்கும்.

காத்திருங்கள்” என பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் செய்தி தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிஃப் கஃபூர் இந்தியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *