பிரதான செய்திகள்விளையாட்டு

“புளுவேல்” விளையாட்டில் 11ஆண்டு மாணவன் நேற்று தற்கொலை

மத்தியப்பிரதேச மாநிலம் டட்டியாவை சேர்ந்தவர் சிவம் டாங்கி. இவர் அங்குள்ள பள்ளியில் 11-ம் வகுப்பு படித்த வந்தார். இந்த நிலையில் மாணவர் சிவம் டாங்கி நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்துகொண்ட மாணவனின் கையில் புளுவேல் விளையாட்டுக்கான குறியீட்டை கத்தியால் குத்தி வரைந்து இருந்தார்.

ஆனாலும் மாணவர் நீல திமிங்கல விளையாடியதால் தான் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது பற்றி விசாரித்து வருவதாகவும் அவரது செல்போன் ‘லாக்’கில் இருப்பதால் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மாணவரின் தந்தையான கைலாஷ் டாங்கி தனது மகன் செல்போனில் இரவு முழுவதும் பொழுதை கழிப்பான் என்றும் தெரிவித்து உள்ளார். அதன் அடிப்படையிலேயே மாணவர் புளுவேல் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

Related posts

கொரோனா வைரசை பசுவின் கோமியம் கட்டுப்படுத்துமா?

wpengine

கிழக்கு மாகாண சபையின் முதலைமைச்சர் வேட்பாளராக ஹசனலி?

wpengine

மஹிந்த இம்ரான் இடையில் பேச்சு

wpengine