Breaking
Sun. May 19th, 2024

எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுகயீனமுற்றிருந்த நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் எதிர்க் கட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மருத்துவமனைக்குச் சென்ற முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் சம்பந்தனை சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதன் போது, புதிய அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குமாறு எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைத்த வேண்டுகோளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு கண்டி மாவட்டத்திலுள்ள தனது தொகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் போட்டியிடும் உள்ளூராட்சி சபை தேர்தல் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல கண்டியிலுள்ள தனது இல்லத்தில் வைத்து நேற்றைய  தினம் காலை சந்தித்துப் பேசிய போதே ஹெகலிய மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார்.

இதன் போது அங்கு பேசிய கெஹலிய,
நேற்று முன்தினம் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வைத்து மிகத் தெளிவான விடயமொன்றை கூறியிருந்தார்.

நாங்கள் புதியவொரு விடயத்தை கோரவில்லை. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி மைத்திரிபால – ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுமாறே கோருகின்றோம்.

அந்த வாக்குறுதிக்காக 6 இலட்சத்து 72 ஆயிரம் வாக்குகளை வடக்கில் பெற்றுக்கொடுத்துள்ளோம்.
அதனால் அரசியலமைப்பு திருத்தமல்ல, அன்று வழங்கிய வாக்குறுதியான புதிய சமஷ்டி அரசியலமைப்பையே கோருவதாக சுமந்திரன் தெரிவித்திருக்கின்றார். அத்துடன் சமஷ்டிக்கும் மேல்சென்ற அரசியலமைப்பை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

ஜே.வி.பி இதற்கு ஆதரவளிப்பதாக கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவது இன்றைய இயற்கையாகும்.
அன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எதிர்கட்சித் தலைவரும், கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் புதிய அரசியலமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சம்பந்தன் விடுத்த வேண்டுகோளை நிராகரித்தவர் மஹிந்த ராஜபக்ச.
எனினும் அந்த இடத்தில் வேறு தலைவர்கள் இருந்திருந்தால் ஆம் அப்படியே அதனை செய்துவிடுவோம் என்று கோழைத்தனமாக சொல்லியிருப்பார்கள். மஹிந்த ராஜபக்சவைப் போன்று அவரையொத்த தலைவர்கள் இந்த நாட்டில் இல்லை என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *