பிரதான செய்திகள்

புத்தளம்,மன்னார் ,முல்லைத்தீவு கரையோர எச்சரிக்கை!

புத்தளம், மன்னார் ,காங்கேசன்துறை மற்றும்  முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என வானிலை அவதான நிலையம்
எதிர்வுகூறியுள்ளது.


விசேடமாக மன்னார் வளைகுடா பிரதேசத்தில் காற்றின் வேகம் எதிர்வரும் 18 மணித்தியாலங்களுக்கு அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிலையம்
வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என அதில்
குறிப்பிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும் அம்பாந்தோட்டை வரையிலான
கடற்பகுதியில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 60 கிலோமீற்றர் வரை
அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாக அவதானத்துடன் இருக்குமாறு மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினரிடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

Related posts

சம்பந்தன் இருட்டில் தடவிக்கொண்டு முஸ்லிம் பெண்களை கேவலப்படுத்தியுள்ளார்.

wpengine

மடு திருத்தலத்தில் சிங்கள தாய் மரணம்

wpengine

டொனால்ட் ட்ரம்ப் மன­நலம் பாதிக்­கப்­பட்­டவர்.

wpengine