பிரதான செய்திகள்

புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த மு.கா.உறுதுணை மாஹிர்

(எம்.எம்.ஜபீர்)
புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதில் ஒரு சில பெருபான்மை சமூக அமைப்புக்கள் தடைகளை ஏற்படுத்தி வருகின்ற இந்த காலகட்டத்தில் சிறுபான்மை மக்கள் வழங்கிய ஆணையை ஏற்றுக் கொண்ட இந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை நிறைவேற்றும். நாம் அனைவரும் அளித்த வாக்குகளுக்காக  புதிய அரசியலமைப்பில் எமது முஸ்லிம் சமூகத்தின்  அபிலாசகைகள் அடக்கியதாக இருக்கும் என  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் நம்பிக்கை  தெரிவித்தார்.

சம்மாந்துறை மலையடிக் கிராமம் கிராமிய மகளிர் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுடனான சந்திப்பு நேற்றுமுன் தினம்  இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் இங்கு கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சியை ஏற்படுத்திய சிறுபான்மை மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சி மாற்றத்தினை கொண்டு வருவதற்கும், அதேபோல் இந்த நல்லாட்சி அரசங்கத்திற்கு வாக்களித்த பெரும்பான்மையான மக்கள் எதிர்பார்க்கும் மாற்றைத்தினை எற்படுத்துவதற்கும் ஜனநாயக ரீதியாக மக்கள் ஆணையை வழங்கியுள்ளார்கள்.
குறிப்பாக புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே மக்கள் தமது ஆணையை கொடுத்திருக்கின்றனர்.

பெரும்பான்மை சமூகத்திலுள்ள ஒரு சில அமைப்புகள் இதனை எதிர்த்து இடர்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு வருகின்ற இந்த காலகட்டத்தில் ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணைக்கு மதிப்பளித்து குறிப்பாக சிறுபான்மை மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு  இந்ந நல்லாட்சி அரசாங்கத்திற்கு இருக்கிறது.

ஆகவே புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்த வேண்டிய இந்த அரசங்கத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதுணையாக இருக்கும் ஏனெனில் இலங்கை முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம் என்ற ரீதியில் இந்த கட்சி புதிய அரசியல் அமைப்பை ஏற்படுத்துவதற்கு மிகவும் உறுதுணையாகவும் நல்லாட்சிக்கு ஆதரவாகவும் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவேதான் புதிய அரசியல் அமைப்பில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாசைகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதில் கரிசனையோடு ஸ்ரீங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான  ரவூப் ஹக்கீம் மும்முரமாக செயற்பட்டு வருகின்றார்.

சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை  ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கிழக்கு மாகாண சபை ஊடாக ஆடைத் தொழிற்சாலையை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் திறப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இதன் மூலம் உங்களுடைய பிள்ளைகள் குறிப்பாக பிரதேசத்திலுள்ள வறிய குடும்பங்களில் வாழும் யுவதிகள் தொழில் வாய்ப்புக்களை பெற்று பணி புரிவதன் மூலம்  சிறந்த எதிர்காலம் அமையும் எனவும் தெரிவித்தார்

Related posts

பிளாஸ்டிக் அரிசி; வதந்தி பரப்பியவர்களுக்கு எதிராக நடவடிக்கை

wpengine

எங்களுடைய உரிமையை பெறுவதற்கு இன்றிருக்கின்ற ஒரேயொரு விடயம்தான், மாகாணசபை முறை மட்டும்

wpengine

வவுனியா, புளியங்குளம் ஏ9 வீதியில் மாட்டுடன் முச்சக்கரவண்டி மோதல்

wpengine