பிரதான செய்திகள்

புதிதாக 20ரூபா நாணயம்! 70வது ஆண்டு நிறைவு

இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன்வினால் நேற்று (24) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இது இலங்கை மத்திய வங்கியின் 70 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட நினைவு நாணயம் ஆகும்.

நாணயம் 7 பக்க வடிவத்துடன் நிக்கல் பூசப்பட்ட எஃகு மூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. 05 மில்லியன் நாணயங்கள் எதிர்வரும் மார்ச் 03 ஆம் திகதி முதல் புழக்கத்தில் விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

போக்குவரத்து வேவையில் பொலிஸ் கடமையில்

wpengine

உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர்

wpengine

ஹசன் அலிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! சபீக் ரஜாப்தீன் தெரிவிப்பு

wpengine