பிரதான செய்திகள்

பாதுகாப்பின்றி சாதாரண நபர் போன்று கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

நாவல பூங்காவிற்குள் திடீரென நுழைந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கு நடைபெறும் பணிகளை கண்காணித்துள்ளார்.


கடமை ஒன்றிற்காக சென்றுக் கொண்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாவல பூங்காவுக்கு சென்றுள்ளார்.

சாதாரண நபர் போன்று சென்ற ஜனாதிபதி, குப்பைகளை சுத்தப்படுத்தப்படுவதனை கண்காணித்துள்ளார்.

அதனை உரிய முறையில் நிறைவேற்றுவது தொடர்பில் இராணுவ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அங்கு உடற்பயிற்சி செய்துக் கொண்டிருந்த பலர் ஜனாதிபதியின் செயலை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிய வருகிறது.

பெரிய பாதுகாப்பின்றி சாதாரண நபர் போன்று அவ்விடத்திற்கு சென்று குப்பைகளை சுத்தப்படுத்தும் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஜனாதிபதியின் செயற்பாட்டிற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Related posts

ISIS அமைப்பின் முஸ்லிம் உறுப்பினர் புதுடில்லியில் தங்கியிருந்த போது கைது.

wpengine

இலங்கை முஸ்லிம்கள் மீதான தாக்குதல்! ஐ.நாவில் மாட்டிக்கொண்ட இலங்கை

wpengine

யேமனில் கூட்ட நெரிசலில் சிக்கி 80க்கு மேற்பட்டோர் பலி!

Editor