பிரதான செய்திகள்

பலர் தலைமறைவு இவர்களை கண்டுபிடியுங்கள்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் தனிமைப்படுத்தல் நடவடிக்கையை தவிர்த்தவர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.


குறித்த நபர்களை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.


குழந்தைகள் உட்பட குழுவினர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் மறைந்திருப்பதால் அவர்களை கண்டுபிடிப்பதற்கு பொலிஸால் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


அதற்கமைய இன்று மாலை புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்ட பொலிஸ் ஊடக பிரிவு பொது மக்களிடம் உதவி கோரியுள்ளது.


அதற்கமைய இந்த புகைப்படங்களில் உள்ளவர்கள் தொடர்பில் தகவல் அறிந்தால், 119, 071-8591864 அல்லது 011-2444480 என்ற இலக்கங்களுக்கு தொடர்புக் கொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


குறித்த நபர்கள் இத்தாலியில் இருந்து நாடு திரும்பியுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கு ஒத்துழைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மற்றவர்களையும் தங்களையும் பாதுகாக்க நாடு முழுவதும் பல தனிமைப்படுத்தல் நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த வெளியேற்றம் மைத்திரி உள்ளே! காரணம் பேஸ்புக் -ஜீ.எல்.பீரிஸ்

wpengine

இஸ்லாமிய தமிழ் இலக்கியப் பொன் விழா – 2016

wpengine

மாதம்பை இஸ்லாஹியா அரபுக் கல்லூரி சம்பியனாக தெரிவு

wpengine