பிரதான செய்திகள்

பராமரிக்க பணமில்லாததால் “மக நெகும” திட்ட நிறுவனங்கள் கலைக்கப்படும்!-பந்துல-

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களையும் கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர், நிறுவனங்களை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

மக நெகும திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து நிறுவனங்களும் கலைக்கப்படும். ஏனெனில் அவற்றை பராமரித்துச் செல்ல போதிய வருமானம் இல்லை. ஒன்றும் செய்வதற்கில்லை. வேலை செய்ய பணமில்லை. எனவே, அந்த நிறுவனங்களை பராமரிக்க முடியாது. அரசு நிறுவன சீர்திருத்தத்தின் கீழ் அந்த அந்த நிறுவனங்கள் கலைக்கப்படும். மக நெகும மற்றும் அதனுடன் தொடர்புடைய 4 நிறுவனங்களுமே இவ்வாறு கலைக்கப்படவுள்ளது.

Related posts

ஆணொருவர் புர்கா அணிந்து சென்ற சம்பவத்தால் பதற்றம்

wpengine

ரஷ்யாவுக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா

wpengine

முகக்கவசம் அணியாமல் தள்ளுவண்டி வந்தவர் கைது

wpengine