Breaking
Thu. Apr 25th, 2024

மத்தியபிரதேச மாநிலத்தில் நடைபெறும் திருமணங்களில்,  மணப்பெண்ணுக்கு அவளுக்கு பிடித்தமான நகைகளையோ அல்லது வீட்டு உபயோக பொருட்களையோ மாப்பிள்ளை வீட்டார் மணப்பெண்ணுக்கு பரிசளித்து, தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்வது பாரம்பர்ய வழக்கம்.

சமீபத்தில் அங்குள்ள  கிசிபுரா என்ற கிராமத்தில் நடந்த திருமணம் ஒன்றில்,  மணப்பெண் பிரியங்கா படோரியா  தனக்கு விருப்பமான பரிசாக மாப்பிளை வீட்டாரிடம் கேட்டது என்ன தெரியுமா?

அவர் கேட்டவை அனைவரையும் வியக்க வைத்துள்ளது. ஆம். 10,000 மரக்கன்றுகளை திருமண பரிசாக  தன் கணவர் வீட்டாரிடம் கேட்டிருக்கிறார் 22 வயது பிரியங்கா.பத்து தங்க நகைகளுக்கு பதிலாக மரங்கள் நடப்பட வேண்டும் என்று கூறியதும் ஏதோ, இருபது மரங்கள்தான் கேட்பார் என்று நினைத்திருந்தனர்.

 ஆனால் அவர் கேட்டது பத்தாயிரம் மரக்கன்றுகள்.

மாப்பிள்ளை ரவி சவுஹான் மரங்கள் மீது தன் வருங்கால மனைவிக்கு இருக்கும்  விருப்பத்தை

அறிந்து இதற்கு சம்மதித்து இருக்கிறார்.  “மரங்கள் வெட்டப்பட்டு பாலைவனமான பூமியில் விவசாயியான என் தந்தைபட்ட வேதனைகள் தன் மனதில் , ஆழமாக பதிந்துள்ளதால்

மரங்களின்  முக்கியத்துவம் எனக்கு நன்கு புரியும். பிறப்பு முதல் இறப்பு வரை மரங்கள் மனிதனுக்கு உதவுகின்றன.

ஆதலால் மரங்களை வளர்த்தாக வேண்டும் என்பது எனது விருப்பம்” என கூறும் பிரியங்கா, பத்தாயிரம் மரக்கன்றுகளில் பாதியை தன் தந்தை வீட்டுப் பகுதியிலும், மறுபாதியை தன் கணவன்
வீட்டு பகுதியிலும் நடுவதற்கு கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறு வயதில் இருந்தே மரங்களின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்ட  பிரியங்கா, இந்த பத்தாயிரம் மரக்கன்றுகளை வளர்த்து,  விவசாயிக ளுக்கும் இயற்கைக்கும் உதவப்போவதை நினைத்தால் தனக்கு பெருமையாக உள்ளது என்கிறார். மேலும், ‘உலக பூமி தின’த்தன்று என் திருமணம் நிச்சயித்த நாளிலிருந்தே எனக்கு இந்த ஆசை இருந்தது. பத்து வயதில் இருந்தே மரங்களை நான் நட்டு பராமரித்து வருகின்றேன். இனி என் கணவரோடு சேர்ந்து என் வாழ்நாள் முழுவதும் மரங்கள்  நடுவேன்’ என்கிறார்

ஏப்ரல் 22 ம் தேதி திருமணம் முடிந்த கையோடு தங்கள் ஊரில் மாங்கன்றுகளை நட்டிருக்கும் இந்த ஜோடி,  இனி வரும் ஒவ்வொரு திருமண நாளுக்கும் பல மரக்கன்றுகளை நடப்போவதாக கூறுகின்றனர்.
இந்த ஜோடிக்கு நாம் பசுமை வணக்கங்களை வைப்போமா?

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *