பிரதான செய்திகள்

பயங்கரவாத குழுக்களை உருவாகியுள்ளார் ஹிஸ்புல்லாஹ்! குற்றச்சாட்டு

கடந்த 21ஆம் திகதி தாக்கிய மிலேச்சத் தனமான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக கந்தளாய் பிரதேச சபையின் பொது ஜன பெரமுன உறுப்பினர் லமா ஹேவாகே தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண ஆளுநரை பதவி விலக்குமாறு கோரியும், தற்கொலை குண்டுத் தாக்குதலை கண்டித்தும் இன்று காலையிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் கந்தளாய் பிரதேச சபையின் முன்னால் கூடாரமைத்து முன்னெடுத்து வருகின்றார்.

இவ் விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்திலிருத்ததே பயங்கரவாத குழு உருவாகியுள்ளது. இதற்கு உரமூட்டியது கிழக்கு மாகாண ஆளுநரான ஹிஸ்புல்லாவே. இவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்.

சாந்தி சமாதானமாக வாழ்ந்த நாட்டில் தீவிரவாதிகளை உருவாக்கியவர் ஹிஸ்புல்லாவே எனவும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு பௌத்த தேரர்களும் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மஹிந்த,ரணில் இரகசிய உறவு

wpengine

பொதுபலசேன ஞானசாரதேரர் அவர்களை வன்னித்தமிழ் இளைஞர் கழகம் வரவேற்கின்றோம்.

wpengine

பலர் தலைமறைவு இவர்களை கண்டுபிடியுங்கள்

wpengine