கட்டுரைகள்பிரதான செய்திகள்

நிழலான நிஜங்கள் நடந்தது என்ன? (பகுதி 7) ஒரு காதலியும்,ஒரு காமுகனும்

(ஒருவரின் குறைகளை வெளிப்படுத்தஅனுமதிக்கப்பட்ட 6 சந்தர்ப்பங்களைப் பற்றி இமாம் நவவி கூறும்போது “இறுதியாக ஒரு தலைமைத்துவத்தில் இருக்கும் ஒருவர் அந்தப் பொறுப்புக்கு பொருத்தமானவரல்ல அல்லது அவர் ஒரு பாவி என்ற காரணங்களுக்காக தனது கடமையை நிறைவேற்றவில்லை எனும் சந்தர்ப்பங்களில் ஒருவர் அவரின் குறைகளை அவரின் மீது அதிகாரம் கொண்டவர்களிடம் குறிப்பிட்டு அவரை நீக்கவோ அல்லது அவருக்குப் பதிலாக இன்னொருவரை நியமிக்கவோ முயல வேண்டும்.அல்லது அவருக்குப் பொறுப்பாக இருப்பவர்கள் அவரின் குறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதன் மூலம் அவரோடு நடந்து கொள்ள வேண்டிய முறையை தெரிந்து கொள்வதோடு அவரால் ஏமாற்றப் படாமல் தவிர்ந்து கொள்ளலாம். இதன் மூலம் அவரை நேர்வழிப்படுத்த அல்லது பதவியில் இருந்து விலக்க முயலலாம்”

-(அல் அத்கார், ஹிப்ழுல் லிஸான்,இமாம் நவவி)

குமாரி தனது கதையைக் கூறத்தொடங்கினார்.ஒரு முஸ்லீம் அரசியல் தலைவனால் அநியாயம் இழைக்கப்பட்ட ஒரு அப்பாவியின் அந்தக் கதை இன்று உங்களிடம் நீதி கேட்டு மன்றாடி நிற்கிறது.நீங்கள் தெரிவு செய்தீர்களே ஒரு தலைவன் அவனால் மீண்டும் மீண்டும் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் நீங்கள் வாக்களித்த மரத்தின் நிழலில் நின்று கொண்டு,நீங்கள் சுஜூது செய்யும் இறைவனின் பெயரால் உங்களிடம் நீதி கேட்கிறாள். தலையில் தொப்பியையும் வார்த்தையில் குர்ஆனையும் உச்சரித்துக் கொண்டு உங்கள் முன்னர் ஒரு மகானைபோல் நடிக்கும் உங்கள் தலைவனால் பாவித்துவிட்டுக் கைவிடப்பட்டு இறந்து போன ஒரு பெண்ணின் ஆன்மா உங்கள் வாசலில் வந்து இன்று நீதி கேட்டு நிற்கிறது.அநியாயம் இழைக்கப்பட்ட அந்த ஆத்மாவின் சாபம்தான் உங்கள் அரசியலை இன்று வரைக்கும் ஆட்டிப்படைக்கிறது போல் இருக்கிறது. அவளின் கதையைக் கேளுங்கள். உங்களிடம் காட்டவிரும்பாத உங்கள் தலைவனின் சீழ் வடியும் இருண்ட முகத்தை உற்றுப் பாருங்கள்.அந்த அபலையின் கதையைக் கேட்பதற்கு ஹக்கீமைத் தலைவராக ஒப்புக்கொண்ட உங்களைவிடத் தகுதியானவர்கள் வேறு எவரும் இல்லை.

உங்கள் தலைவனின் காதலியின் பெயர் மேரியன் குமாரி லங்கா கூரே.இலக்கம் 5/6 றொயல் கோட்,பெடரிஸ் வீதி கொழும்பு 03 அதுதான் அவர் உயிர்வாழ்ந்த போது வசித்த வீடு.சிங்கள கத்தோலிக்க இனத்தைச் சேர்ந்தவர். ஹெறோல்ட் விஜயசிங்க என்பவரைத் திருமணம் முடித்து விவாகரத்தானவர்.ஹக்கீமுடனான தொடர்பு ஏற்படும்பொழுது குமாரியும் அவரது கணவனும் கொழும்பு 8ல் உள்ள, எல்விடிகல வீட்டுத்திட்டத்தில் இல. K/1/6 எனும் விலாசத்தில் வசித்து வந்தார்கள்.

2001 டிசம்பர் காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் குமாரியை ஹக்கீமுக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.அதன் பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டனர்.அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் இடையில் நெருக்கமான தொடர்பு ஏற்பட்டது.அதனைத் தொடர்ந்து ராஜகிரியை றோயல் பார்க்கில் இலக்கம் 15-0-3B எனும் விலாசத்தில் இருக்கும் ஹக்கீம் அவர்களின் நண்பர் ஒருவரின் வீட்டில் அவர்கள் இருவரும் ரகசியமாகச் சந்திக்க ஆரம்பித்தனர். அந்த வீட்டில்தான் முஸ்லீம் காங்கிறஸின் தேசியத்தலைவர், இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தை, மாற்றானின் மனைவியோடு மஞ்சத்தில் மகிழ்வாக இருந்தார்.இரவு நேரங்களில் அவளை வீட்டுக்குப் போகவேண்டாம் என்றும் அவரது கணவனை விட்டுவிட்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தன்னிடம் வரும்படியும் தான் அவரை மணந்து கொள்வதாகவும் இருவரும் சந்திக்கும் போதெல்லாம் ஹக்கீம் குமாரியிடம் கூறி வந்தார்.

அதன் பின்னர் கொழும்பு பிளவர் வீதியில் இருக்கும் ஹக்கீம் அவர்களின் நண்பர் ஒருவரின் வீட்டில் குமாரியும் ஹக்கீமும் அடிக்கடி சந்தித்துக் கொண்டார்கள். (அந்த நண்பரின் பெயர் தெரிந்திருந்தும் அவர் ஹக்கீமைப் போல் மக்களின் தலைவர் இல்லை என்பதால் அவரின் பெயர் இங்கே எழுதப்படுவது தவிர்க்கப்படுகிறது) அங்கும் கூட இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்தனர்.ஒரு வாரத்திற்கு சுமார் மூன்று தடவை அந்த வீட்டில் அவர்கள் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

அத்தோடு கண்டியில் இருக்கும் ஏர்ள் ரீஜென்சி (Earl’s Regency) ,மஹவலி ரீச் ஹொடெல் (Mahaveli Reach Hotel) போன்ற இடங்களிலும் அவர்கள் சந்தித்துக்கொண்டனர். அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் ஹக்கீம் குடி போதையில் இருந்தார்.குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தன்னிடம் வருமாறு அடிக்கடி வற்புறுத்திய காரணத்தினால் கல்கிஸையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து குமாரி அங்கு வசிக்க ஆரம்பித்தார்.அந்த வீட்டுக்கான வாடகையை ஹக்கீம் அவர்களே செலுத்தி வந்தார்.அந்த வீட்டிற்கு ஹக்கீம் அடிக்கடி வருவார்.சில நாள்களில் இரவுகளையும் அங்கு கழிப்பார்.

அதன் பின்னர் 2003 ஆகஸ்ட் காலப்பகுதியில் ஜா எலெயில் நிவாசிபுர வீட்டுத்திட்டத்தில் 20வது இலக்க வாடகை வீட்டிற்கு குமாரி மாறினார்.அந்த வீட்டை பெற்றுக்கொடுத்ததும் முஸ்லீம் காங்கிறசின் தேசியத் தலைவர் ஹக்கீம் அவர்கள்தான்.அந்த வீட்டிலும் அவர்கள் அடிக்கடி சந்தித்து வந்தனர்.

குமாரியைப் பொறுத்தவரைக்கு தன்னை மணமுடிக்க வாக்களித்திருக்கும் ஒரு மனிதர்ஹக்கீம். சொல்லப்போனால் அனைத்தையும் இழந்துவிட்டு ஹக்கீம்தான் தனது வாழ்க்கை என்ற நிலைக்கு குமாரி வந்திருந்தார்.ஹக்கீம் தன்னை நேசிக்கவில்லை,தன் உடம்பைத்தான் நேசித்தார் என்று குமாரி ஒரு போதும் நினைத்துப்பார்க்கவில்லை.ஹக்கீமை உயிருக்கு உயிராக நேசித்த பெண் அவர்.ஹக்கீமுக்காக தன் கணவனை விட்டு வெளியேறி வந்த பெண்.இஸ்லாத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் முடிக்க முடியும் என்ற அனுமதி, ஹக்கீம் தன்னை திருமணம் முடிப்பார் என்ற நம்பிக்கையை குமாரியிடம் வலுப்படுத்தியிருக்கும். பின்னர் தனக்காக கொல்பிடியில் ஒரு சொந்த வீடு,ஒரு வாகனம் வாங்கித்தரும் ஒருவர் தன்னை ஒருபோதும் கைவிடவே மாட்டார் என்று குமாரி மிகவும் நம்பியிருந்தார்.

ஆனால் ஹக்கீமின் சிந்தனை வேறு.வகை வகையாக விருந்துண்பவருக்கு ஒரு உணவு எத்தனை நாளைக்கு இன்பம் தரும்.மெதுமெதுவாக குமாரியைக் கைவிட ஆரம்பித்தார்.குமாரியின் வீட்டிற்கு செல்வதை நிறுத்திக் கொண்டார்.அவளின் தொலைபேசி அழைப்புகளைத் தட்டிக்கழித்தார்.இவ்வாறு ஒரு மாசம் கழிந்தது.குமாரி கவலைப்பட ஆரம்பித்து ஹக்கீமைத் தேடிச் செல்ல முடிவு செய்தார்.

ஒரு மாதகாலமாக ஹக்கீம் தன்னைத் தொடர்பு கொள்ளாததால் 2003 செப்டம்பர் மாதம் 13ம் திகதி அல்லது அதற்கு அடுத்த தினங்களில் அவர்கள் இருவரும் முன்னர் சந்தித்த பிளவர் வீதியில் அமைந்துள்ள ஹக்கீமின் நண்பரின் வீட்டிற்கு ஹக்கீமைத் தேடி குமாரி சென்றார்.அந்த சந்தர்ப்பத்தில் ஹக்கீம் அவர்களின் ஜீப் அந்த வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. வீட்டில் ஜீப் இருப்பதைக் கண்டு வீட்டிற்கு உள்ளே சென்ற போது ஹக்கீம் அவர்கள் ஒரு வெளி நாட்டுப் பெண்ணோடு மது அருந்திக் கொண்டிருப்பதை குமாரி கண்டு கொண்டார். குமாரியைக் கண்டவுடன் ஹக்கீம் அவர்கள் அந்த வெளிநாட் டுப்பெண்ணை வெளியேற்றிவிட்டார்.யார் அந்தப் பெண் என்று குமாரி வினவ இருவருக்கும் இடையில் வாக்குவாதம் மூண்டது.அதன் பின்னர் குமாரி அவ்விடத்தில் இருந்து வெளியேறிப் போய்விட்டார்.

அந்த சம்பவத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் 2004 ஏப்ரல் 13ம் திகதி வரைக்கும் நேரடியாகச் சந்திக்கவில்லை. ஆனால் தொலைபேசியில் இருவரும் பேசிக்கொண்டனர்.பேசும்போதெல்லாம் மீள வரும்படியும் தான் குமாரியை மணந்து கொள்வதாகவும் ஹக்கீம் வாக்குறுதியளித்தார்.

காதல் ஒரு வகையான புகை மூட்டம் மாதிரி.அது சிந்தனையை தன் புகைகளைக் கொண்டு மூடிவிடும்.சரி, பிழையின் வாசல்களை அடைத்துவிடும்.சூனியம் செய்யப்பட்ட ஒரு விலங்கு போல இதயம் தான் நேசித்தவனைச் சுற்றிச் சுற்றிவரும்.தன் காதலுக்காக எதுவும் செய்யலாம் எதையும் இழக்கலாம் என்ற மனநிலைதான் காதலின் உச்ச நிலை. இஸ்லாம் திருமணத்திற்கு முன்னர் அந்நியப் பெண்கள் மீதான காதலைத் தடுக்கிறது. குமாரி கூரேயின் நிலையும் அதுதான்.ஹக்கீமைத் திருமணம் செய்வதற்காக எதுவும் செய்யத் தயாராக இருந்தார். குமாரிக்குத் தன்மீதான காதலை ஹக்கீம் தன் காமத்திற்காக நன்றாகப் பாவித்துக்கொண்டார்.

தன்னை திருமணம் முடிப்பதாக பலமுறை ஹக்கீம் ஏமாற்றியும் கூட,அதை இன்னொரு முறை ஹக்கீம் கூறும் பொழுது அவருக்குள் புது நம்பிக்கை பிறந்தது. இன்னொரு முறை ஏமாற்றப்படும் வரைக்கும் அந்த நம்பிக்கையே அவர் வாழ்நாளைக் கடத்திக்கொண்டு வந்தது.அந்த நம்பிக்கை இழந்த போது குமாரி தன்னையே அழித்துக்கொண்டார்.

தொலைபேசியில் ஹக்கீம் தன்னைத் திருமணம் முடிப்பதாகக் கூறியதை அடுத்து அதையும் அந்த அப்பாவி நம்பினார்.ஏற்கனவே குமாரியிடம் ஒரு குர் ஆன் பிரதி இருந்தது.அவர் இஸ்லாத்தைப் படிக்க ஆரம்பித்திருந்தார். .வெள்ளவத்தையில் அல் ஹிதாயா தஃவா நிலையத்தில் இஸ்லாத்தைக் கற்பதற்காக குமாரி சேர்ந்து கொண்டார்.(இந்தக் கதைக்கும் அல் ஹிதாயா நிறுவனத்திற்கும் நேரடியான தொடர்புகள் இல்லாதபடியால் நிறுவனப் பொறுப்பாளரின் பெயர் இங்கு தவிர்க்கப்படுகிறது)

அவ்வாறான நிலையில்தான் 2004 ஏப்ரல் மாதம் 13ம்திகதி ஹக்கீமுக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறுவதற்கான கெபிடிபொல மாவத்தையில் இருக்கும் ஹக்கீமின் வீட்டிற்கு குமாரி சென்றார்.ஹக்கீம் அங்கு இல்லை என்று அவருக்குச் சொல்லப்பட்டது.ஆனால் அங்கு ஹக்கீம் இருந்ததைத் தெரிந்து கொண்டு ஹக்கீம் வரும்வரைக்கும் அந்த அப்பாவி அபலை ஹக்கீமின் வீட்டு கதவடியில் காத்துக்கொண்டிருந்தார்.அந்த சந்தர்ப்பத்தில்தான் ரிஷாட் பதுர்தீன்,அமீர் அலி,நஜீம் ஏ மஜீத்,பைசல் காசிம் ஆகிய நால்வரும் ஹக்கீமின் வீட்டிலிருந்து வெளியே வந்த போது குமாரியைச் சந்தித்தனர்.அதன் பின்னர் நடந்தவை அனைத்தும் இத்தொடரில் ஏலவே கூறப்பட்டுவிட்டது.

குமாரி தனது கதையைக் கூறி முடித்தார்.ஹக்கீம் தலை கவிழ்ந்தவாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

முஸ்லீம் சமூகமும் கூடவே அன்றுமுதல் தலை கவிழ்ந்துவிட்டது.
தொடரும்….

Related posts

அமைச்சர் ஹக்கீமின் கட்டார் கனிமூன்

wpengine

காரியப்பர் சம்மாந்துறை தபால் நிலைய அதிபராக இடமாற்றம்.

wpengine

சுதந்திரமாக செயற்பட வழிவிடுங்கள்” மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் வேண்டுகோள்!

wpengine