Breaking
Sat. May 4th, 2024

கண்டி மாவட்டத்தில் தீவிரமடைந்த வன்முறை சம்பவத்தினால் முடக்கப்பட்டுள்ள சமூகவலைத்தளங்கள் மீளவும் இயங்கும் தினம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடையை கூடிய விரைவில் நீக்கி கொள்ளுமாறு வெளிநாட்டு ராஜதந்திர அதிகாரிகளினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன் அந்த சம்பவத்தின் பின்னர் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷப் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

சமூக வலைத்தளம் என்பது சிறப்பான ஒரு தொழில்நுட்பமாக உள்ள போதிலும் வன்முறை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயங்களை பரப்புவது தொடர்பில் பொறுப்புடன் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த வேண்டும். கோபம் கொண்டு சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துபவர்களே உண்மையான குற்றவாளிகள் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *