விளையாட்டு

நியூசிலாந்து அணிக்கு 142 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி!

இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது ரி20 கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியில் நியூசிலாந்து வெற்றி பெற்று முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 19 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 141 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 37 ஓட்டங்களையும் குசல் பெரேரா 35 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்துவீச்சில் Adam Milne 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

அதனடிப்படையில் நியூசிலாந்து அணிக்கு 142 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜுலை 18 ஆம் திகதிவரை நாமல் சிறையில் (விடியோ)

wpengine

என்னைவிட யாரையும் சிறப்பாக பார்க்கவில்லை! நான்தான் வரலாற்றில் சிறந்த வீரன் – ரொனால்டோ.!

Maash

உயரம் பாய்தல்! அகில இலங்கை ரீதியில் முஸ்லிம் மாணவி இரண்டாம் இடம்.

wpengine