Breaking
Sat. May 18th, 2024

மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் குறைக்க வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மின்தேவை குறைவு, டொலரின் மதிப்பு குறைவு, எரிபொருள், நிலக்கரி விலை குறைவு போன்ற காரணங்களால் அதற்கேற்ப மின் கட்டணமும் குறைய வேண்டும் என்றார்.

2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 3 மாதங்களில் மின்சாரத் தேவை 18 சதவிகிதம் குறைந்துள்ளது.

மின் தேவை குறைவதால், மின் உற்பத்தி மற்றும் வழங்கல் செலவும் குறைகிறது. இலங்கை மின்சார சபையினால் இந்த வருடத்திற்கான மின் தேவை சரியாக இல்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் மதிப்பீடு சரியானது. குறைந்த தேவை இருப்பதால் தான், 35 சதவீத கட்டண உயர்வை பரிந்துரைத்துள்ளோம்.

ஆனால் இந்த நிலைமையை புரிந்து கொள்ளாமல் இலங்கை மின்சார சபை கோரிய 60 வீத கட்டண உயர்வை ஆணைக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அங்கீகரித்துள்ளனர்.

ஆனால் இலங்கை மின்சார சபையினால் மதிப்பிடப்பட்ட மின்சாரத் தேவைக்கு பதிலாக குறைந்த தேவையே காணப்படுகின்றது. இதனால், மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்இ என்றார்.

இதேவேளை உயர் மின் கட்டணத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சுமார் 50 இலட்சம் மின் நுகர்வோர் மற்றும் உள்நாட்டுத் துறையில் உள்ள சிறு வணிகர்களுக்கு உடனடி நிவாரணம் அளிக்க மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்.

எரிபொருள் விலை வீழ்ச்சியின் பலனை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் எனவும் நிதியமைச்சு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி இனியும் தாமதிக்காமல் மின் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

A B

By A B

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *