பிரதான செய்திகள்

நாம் நாமாக இருப்போம் இளைஞனே!

(Fahmy Mohamed-UK)

ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரையும் அளவுக்குமீறி புகழவும்,அளவுகடந்து கீழ்த்தரமாகப் எழுதவும் முகநூளில் அப்பாவி இளைஞர்கள் பழியாக்கப்படுகின்றனர்.குறிப்பாக படித்த மற்றும் உத்தியோகம் செய்கின்றவர்கள் சமூகத்தில் இந்த ஈனப்பிறவி செயல்களுக்கு தலமைதாங்குகின்றனர்.

இந்த சமூகத்தின் நிகழ்கால மற்றும் எதிர்காலம் நீங்களே.சமூகத்தின் அடுத்த கட்ட நகர்விற்கு இன்றே ஆயத்தமாகும் சிந்தனையாளர்களும்,உயிரோட்டமுள்ள செயற்பாடுகளும் நீங்களே.

அற்ப சொற்ப ஆசைகளுக்காகவும்,பாராட்டுதல்களுக்காகவும் அரசியல்வாதிகளுக்கு அல்லக்கைகளாக செயற்படவேண்டாம்.உங்கள் பெறுமதி மற்றும் பலம் ஒராயிரம் பராளுமன்ற உறுப்பினருக்குச் சமன்.

படிக்காத,ஆளுமையில்லாத பாராளுமன்ற உறுப்பினர் என்ற பதவிக்காக மட்டும் உங்கள் ஆளுமையை கேவலப்படுத்த வேண்டாம்.பாராளுமன்ற உறுப்பினராக காலத்துக்குக் காலம் இந்த சமூகம் பலரைக் கண்டுள்ளது.இன்னும் பலரைக் காணவுள்ளது.எவரும் நிரந்தரமல்ல.எவருக்கும் பதவியும் நிரந்தரமல்ல.ஆனால் நமது ஆளுமையும் கௌரவமும் நிரந்தரமானது.

உங்களை நீங்களே கேள்விகேளுங்கள்.உங்களால்??உங்கள் சகோதரனால்?உறவினரால்?நண்பனால்? இந்த சமூகத்திற்கு தலமைத்துவத்தை ஏன்வழங்க முடியாது?முடிவும் என்றால் எதற்காக பதவிக்காகவும்,உழைப்பிற்காகவும் சாகும்வரை கதிரையை கட்டிப்பிடித்து இருப்பவனுக்காக நாங்கள் சோரம்போக வேண்டும்.

இந்த சமூகத்திற்கு நீங்கள் விரும்பும் சிந்தனையை எத்தனையோ மூலங்கள் மூலம்நிறைவேற்றலாம் அல்லது சேவையாற்றலாம்.அரசியல்வாதிக்காக வால்பிடிப்பதால் மட்டும் சமூகத்தின் முழுத் தேவையும் நிறைவேறுமா?அல்லது உங்களைத் தான் முழுச் சமூகமும் பாராட்டுமா?  உங்களை நீங்களே ஒருநிமிடம் மனச்சாட்சியிடம் கேளுங்கள்.

இதில் சில ஆசிரியர்களும்,அரச உத்தியோகத்தர்களும் ????இந் சமூகத்தை உருவாக்குவதலும் வழிநடத்துவதிலும் பாரிய பங்காளிகள்.இவர்கள் அரசியல்வாதிகளுக்காக தவறான பேச்சுக்களாலும்,அளவுமீறிய போதைத்தனமான வசனங்களாலும் முகநூளில் வம்புக்காக வாழ்கின்றனர்.

உங்களை பாடசாளையில் ஒவ்வொரு மாணவனும் ஊரில்,ஒவ்வொரு பெற்றோரும் மிகக் கேவலமாக நோக்குவதை உணர்ந்து கொள்ளுங்கள்.பெற்றோருக்கு அடுத்து ஒரு ஆசானுக்கு மரியாதை வழங்கிய நமது சமூகத்தில்..உங்களில் கீழ்த்தரமான முகநூல் விபச்சாரத்தால் மரியாதை இழந்து நிற்கின்றீர்கள்.

ஆகவே அரசியலையும்,அரசியல்வாதியையும் உருவாக்குவதும்,வழிநடத்துவதும் நாமும் நமது வாக்குகளுமே.இவர்களைப் போன்ற எத்தனையோ அரசியல்வாதிகள் மற்றைய ஊர்களிலும் உள்ளனர்.ஆனால் நமது ஊரிலோ மாபியாக் கலாச்சாரம் இளைஞர்களிடம் உருவாகியுள்ளது.

அதாவது அரசியல்வாதிகளை கண்மூடித்தனமாக பாராட்டுவதும்,கேவலமான வார்த்தைகளால் விமர்சிப்பதும்.நாளை இந்த அரசியல்வாதிகள் தோற்றுப் போனால் விவசாயம் கூட செய்ய திறனற்றவர்கள்.நீங்களோ எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் தொடர்ந்து பயணிக்கும் திறன்மிக்கவர்கள்.

உங்கள் ஆளுமை மற்றும் திறமைகளை நீங்களே குறைத்துக் கொள்ளவும்,சந்திசிரிக்க வைக்கவும் காரணமாக வேண்டாம்.உங்கள் திறமைகளுக்கு ஆயிரம் தொழில்களை செய்யலாம்.உங்கள் ஆளுமைக்கு இயலாது என்பதே இல்லை இளைஞனே.

இந்த சமூகத்தின் கனவும்,அந்தக் கனவின் காவலனும் நீங்களே.ஆகவே நமது கனவுகளை சமூகத்தை விற்று வயிறுபிழைக்கும் அரசியல்வாதிகளிடம் அடமானம் வைக்க வேண்டாம்.சுயமாக சிந்தியுங்கள்,தன்நம்பிக்கையுடன் செயற்படுங்கள்.

வேளைவாய்ப்புக்கான வாக்குறுதி,வேட்பளருக்கான வாக்குறுதி,அடிக்கடி படம் எடுப்பதும்,பஜிரோவில் போவதற்குமாக நம்மை நாமே காட்டிக் கொடுக்கிறோம்.அதிஉட்சகட்ட வெறியை நெஞ்சில் ஈட்டியாக்கி மற்றவர்களை தரக்குறைவாக எழுதுகிறோம்.நாம் முஸ்லீம்,நாம் சகோதரர்களாக வாழ்பவர்கள்.அடிக்கடி ஒருவரை ஒருவர் சந்திக்கும் சிறிய ஊரில் வாழ்பவர்கள் என்பதை மறந்துவிடுகிறோம்.அரசியல்வாதிகளுக்காகதலையில் போதை ஏறியவனாக உளறுகிறோம்.இதனால் நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் நாலுபேருக்கும் மட்டுமே நாம் கூறுவதும் எழுதுவதும் உண்மையாக உள்ளது.

முகநூளில் இந்த அரசியல்வாதிகளுக்காக அல்லக்கைகளாக இலவசமாக முகநூளில் நேரத்தை வீணடிக்காமல்!!
சமூகத்திற்கு ஆரோக்கியமான கருத்துக்களையும்,பயனுள்ள சிந்தனைகளையும் தெளிவுபடுத்துங்கள்.முடியாவிட்டால் குறைந்த பட்சம் இளைஞனாக மட்டுமல்ல ஆம்பிள்ளையாக இருக்க முயற்சிக்கலாம்.

நாம் முகநூளில் 10முகம் காட்டுபவனும் 5முகம்காட்டாதவனும் உசிப்பாட்டும் பதிவுகளுக்காக உங்கள் சுயமரியாதையை சூன்யமாக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளை உருவாக்கும் நாங்கள்,அவர்களுக்கு அறிவுரையும்,தவறுகளுக்காக சுட்டிக்காட்டும் ஆலோசகர்களாகவும் இருப்போம்.இனியாவது அர்த்தமுள்ள இளைஞனாகவும்,கிண்ணியாக்காரனாகவும் இருப்போம்.
நாளைய சமூகத்திற்கு நாமே பதில்கூறவேண்டும்.!
நாளை மறுமையில் நாமே பதில்கூறவேண்டும்.!

எந்த அரசியல்வாதியும் நாளைய சமூகத்திற்கோ,மறுமைக்கோ நமக்காக அணுவளவுகூட அருகில் இருக்கமாட்டன்.
இப்படிக்கு
உங்களில் ஒருவன்

Related posts

புலிகளின் சிந்தனையில் வாழும் சில அரசியல்வாதிகள்! வடக்கு முஸ்லிம்கள் அச்சத்தில்

wpengine

மறைந்த முன்னாள் பேராயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று நல்லடக்கம்!

Editor

மாதம்பை பிரச்சினை! ஏன் புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகள் அதில் கவனம் செலுத்தவில்லை?

wpengine