பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரமே! வடமாகாண அமைச்சர் டெனிஸ்வரன்

கடந்த 8 நாட்களாக கேப்பாபுலவு மக்கள் தமது சொந்த காணிகளை விடுவிக்குமாறுகோரி அகிம்சை வழியில் தொடர்ந்து போராடி வருகின்றனர். பிலாக்குடியிருப்பு பகுதி மற்றும் புதுக்குடிருப்பு பிரதேச செயலகம் முன்னால் வயது வித்தியாசம் இன்றி சிறுவர்கள், மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை ஆண்கள், பெண்கள் என இராப்பகலாக கொட்டும் பனியிலும் தமது உரிமைக்காக தொடர்ந்து போராடிவரும் மக்களை சந்தித்தார் அமைச்சர் பா.டெனிஸ்வரன்.

மேலும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

நல்லாட்சி அரசு என்பது வெறும் வாய்ப்பேச்சில் மாத்திரம் இருந்துவிடாமல் தமது செயற்பாடுகளிலும் அதனை நிருபிக்கவேண்டும். மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களை தம்மோடு வைத்துள்ளனர், அவர்கள் தங்கள் பூர்வீக வாழ்விடங்களை தரும்படி கேட்பது அவர்களது அடிப்படை உரிமை, அவ்வாறு அவர்களை தமது சொந்த காணிகளுக்கு செல்வதற்கும் குடியிருப்பதற்கும் அனுமத்திக்காமல் இருப்பதானது அடிப்படை உரிமை மீறலாகும், எங்கே உரிமைகள் மறுக்கப்படுகின்றதோ அங்கே புரட்சிகளும், போராட்டங்களும் வெடிப்பது தவிர்க்கமுடியாதது என்பதனை எமது கடந்த கால அனுபவங்களின் மூலம் கண்டிருக்கின்றோம்.

எனவே உரிய தரப்பினர் காலம் தாழ்த்தாது விரைந்து காணிகளை மீள வழங்குவது காலத்தின் கட்டாயம் என்பதனை வலியுறித்தியததோடு, படையினரின் தேவைக்கு போதியளவு அரச காணிகள் இருக்கும்போது, மக்களது காணிகளை ஆக்கிரமித்திருப்பது யாராலும் நியாயப்படுத்தவோ ஏற்றுக்கொள்ளவோ முடியாது எனவும், வடமாகாணத்தில் விடுவிக்கப்படாத அனைத்து காணிகளையும் விரைவில் விடுவிக்க வேண்டுமெனவும், எமது மக்கள் தங்கள் நிலங்களுக்கு திரும்பாமல் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது மன வேதனை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Related posts

முன்னால் அமைச்சர் றிஷாட்டின் கொழும்பு விஜயம் 27ஆம் திகதி

wpengine

புதிய ஆளுநர்கள் நியமனம்! வடமேல் ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமனம்

wpengine

4 வகையான குற்றங்களுக்கு அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸ்!

Editor