பிரதான செய்திகள்

தேர்தலில் பிரதமர் மஹிந்த தலைமையில் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.

“ஜனாதிபதித் தேர்தலில் பௌத்த சிங்கள மக்கள் தனிச் சிங்களத் தலைவரைத் தெரிவு செய்ததைப் போன்று எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனிச் சிங்கள அரசையும் தோற்றுவிக்க வேண்டும்.


இவ்வாறு பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.


கொழும்பிலுள்ள பொதுபலசேனா அமைப்பின் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தொடர்ந்தும் பேசிய அவர்,


“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட நேரத்தில் இருந்து இன்றுவரையில் தான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என்பதைப் பல செயற்பாடுகளின் ஊடாக நிரூபித்துள்ளார்.


எனவே, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் தனிச் சிங்கள அரசு உருவாக வேண்டும்.


நாட்டில் ஒரு சட்டமே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். எமது நாட்டில் இனங்களுக்கிடையில் சட்டங்கள் வேறுபடுத்தப்பட்டுள்ளன.
ஒரு நாட்டில் ஒரு சட்டத்தையே அனைத்து இன மக்களும் பின்பற்ற வேண்டும் என்ற கொள்கையை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பையும் பெரும்பாலான மக்கள் வழங்க வேண்டும்.


நாடாளுமன்றத்தின் பாரம்பரிய முறைமைகளே பல நெருக்கடிகளுக்கும், அரச நிர்வாகத்துக்கும் தடையாக உள்ளன.


தனிச் சிங்கள அரசில் அடிப்படைவாதக் கொள்கைகளற்ற தமிழ், முஸ்லிம் இனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் புதிய அரசியல்வாதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.


அடிப்படைவாதத்துக்குத் துணைபோனார்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் புறக்கணிக்கப்பட வேண்டும்” என கூறியுள்ளார்.

Related posts

இரு ஆண்கள் இணைந்து மூன்று குழந்தைகள் பெற்றெடுத்த அதிசயம்

wpengine

பேஸ்புக்கின் ஊடாக 500 லச்சம் ரூபா நிதி மோசடி!

wpengine

மின் பாவனையாளருக்கு சந்தோஷமான செய்தி

wpengine