பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

தலைவர் ஏன் சூழ்நிலை கைதியானார் ? எங்கே பலயீனம் உள்ளது ? முஸ்லிம்களின் அரசியல் பயணம் எதை நோக்கியது ?

முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது

நான் சூழ்நிலை கைதியாகி உள்ளதாகவும், எனது உறுப்பினர்கள் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு நான் அனுமதி வளங்கவில்லை என்றும், அதிஉயர்பீட கூட்டத்தில் இது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்க உள்ளதாகவும் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கூறியுள்ளார்.

இது எதிர்பார்க்கப்பட்டதொரு விடயமாகும். முதலில் ஓர் சிறுபான்மை கட்சி என்றரீதியில் எமக்கு ஓர் தெளிவான கொள்கை இருக்க வேண்டும். அந்த கொள்கை பற்றி அடிக்கடி கட்சி உயர்பீட உறுப்பினர்களுக்கு பயிற்சி பட்டறைகள் நடாத்த வேண்டும்.

வெற்றியோ தோல்வியோ நாங்கள் கொள்கையின்பால் பயணிக்கின்றபோது மக்களும் அதன்பின்னால் பயணிப்பார்கள். இதனைத்தான் தலைவர் அஸ்ரப் அவர்கள் செய்து காண்பித்தார். அவர் ஒருபோதும் மேடைகளில் பொய் வாக்குறுதிகள் வழங்கியதில்லை.

ஆனால் நான் அறிந்தவகையில் மு.கா பிரதிநிதிகளுக்கும், அதன் தலைவருக்கும் என்ன கொள்கைகள் உள்ளதென்றும், எதை நோக்கி அரசியல் பயணம் நடக்கின்றது என்றும் தெரியவில்லை.

“தலைவன் எவ்வழியோ குடிகளும் அவ்வழியே” என்பார்கள். தலைவரிடம் கொள்கை இருந்தால்தான் கட்சியின் ஏனைய உயர்பீட உறுப்பினர்களிடமும் கொள்கைகளை எதிர்பார்க்க முடியும்.

ஆனால் இன்று நடைபெறுகின்ற அரசியல் என்ன ?
கோடிக்கணக்கான பணத்தினை மூலதனமாக விதைத்து தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றால் சரி என்ற கொள்கை மட்டுமே காணப்படுகின்றது.

அத்துடன் விலையுயர்ந்த வாகனமும், கொழும்பில் ஆடம்பர மாளிகைகளும் உள்ள பணக்காரர்களுக்கு வழங்கப்படுகின்ற மரியாதை வேறு எவருக்கும் இல்லை. அதாவது கட்சியின் கொள்கையாக பணம் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான பணக்காரர்களுக்கு சமூக உணர்வுகளோ, தியாக மனப்பான்மையோ, அர்ப்பநிப்புக்களோ இருப்பதில்லை. மாறாக இன்னுமின்னும் பணத்தினை பெருக்கும் நோக்கில் வியாபாரத்தினை மட்டுமே மேற்கொள்வார்கள். அதனால் அரசியலையும் வியாபாரமாக்கிவிட்டார்கள்.

ஆனாலும் தேர்தல் செலவுகளுக்காக கட்சியினால் பணம் வழங்கப்படுகின்ற நடைமுறையும் உள்ளது. அவ்வாறென்றால் பணக்காரர்களை வேட்பாளராக நியமிப்பதைவிட உணர்வுள்ள அர்ப்ப சலுகைகளுக்கு சொரம்பாகாதவர்களும் உள்ளார்கள். அவர்களை தேர்தலில் நிறுத்தி செலவுக்கு பணம் வழங்கினால் தலைமைக்கு கொஞ்சமாவது கட்டுப்படுவார்கள்.

அதுமட்டுமல்ல, இந்த அதியுர்பீடத்தில் உள்ளவர்கள் யார் ? இவர்களிடம் என்ன கொள்கைகள் உள்ளது ?

எவர் தலைவரிடம் அதிகமாக கெஞ்சி, காலில் விழுந்து, மற்றவர்களை அள்ளிவைத்து, கோள்மூட்டி, தான் விசுவாசி என்று போலி விசுவாசம் காட்டுகின்றார்களோ, அவர்கள் மட்டுமே அதியுயர்பீடத்தில் இணைக்கப்பட்டுள்ளார்கள்.

அதியுயர்பீடத்தில் உள்ளவர்களுக்கு சமூக பிரச்சினை தெரியுமா ? முஸ்லிம்களின் பூர்வீக வரலாறுகள் தெரியுமா ?

சமூக அரசியல் எதை நோக்கி பயணிப்பது என்ற சாதாரன அறிவு உள்ளதா ? அல்லது வியாபாரிகளின் கூட்டமைப்பா என்றெல்லாம் பலர் என்னிடம் கேட்டிருக்கின்றார்கள்.

எனவே இன்றைய அதியுயர்பீடமானது கொள்கையின்பால் கட்டியமைக்கப்பட்ட பலமான கட்டமைப்பல்ல. அங்கு சமூகத்தை பற்றிய தூர நோக்கு உள்ளவர்கள் இல்லை. அதனால் தலைவர் சூல்நிலைக் கைதியானதற்கு இந்த பலயீனமான அதியுயர்பீடமும் முக்கிய காரணமாகும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை.

Related posts

ரணிலின் பதவிக்கு வந்த சோதனை! சிங்கள இணையம்

wpengine

தையல் இயந்திரங்களை வழங்கி வைத்த சல்மா அமீர் ஹம்ஸா

wpengine

என்னை ஜனாதிபதி செயலாளர் பதவியில் இருந்து விலக அனுமதியுங்கள்! அவசர கடிதம்

wpengine