கட்டுரைகள்பிரதான செய்திகள்

தலைமையைக் காப்பாற்ற இவ்வளவு பணமா? குடைந்து குடைந்து கேட்கின்றனர் (மு.கா) அதிருப்தியாளர்கள்

பாலமுனையில் நாளை மறுதினம் 19ஆம் திகதி நடைபெற இருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் பெரிய படம் ஒன்றைக்காட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் தமக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிப்பதற்காக இந்தப் பிரமாணடமான “ஷோவை” ஹக்கீம் திரையிடவுள்ளார்.

தேசியப்பட்டியல் விவகாரம் சாய்ந்தமருது பிரதேச சபை ஒலுவில் காணிப்பிரச்சினை ஆகியவற்றை இதுவரை ஹக்கீம் தீர்த்து வைக்காததனால் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நாளுக்கு நாள் நுளம்பு பெருகுவது போல அதிருப்தியாளார்கள் கூடிக்கொண்டே வருகின்றனர். அத்துடன் தலைமையின் நடவடிக்கைகளினால் கட்சியின் உயர்பீடத்திலுள்ள சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட முக்கியஸ்த்தர்கள் தலைமையை கவிழ்த்துவதற்கு தருணம் பார்த்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் ஹஸனலிக்கு எம் பி பதவி வழங்கப்படாமை, அவரது அதிகாரங்கள் குறைக்கப்பட்டமை, தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தை கட்சியிலிருந்து ஓரங்கட்டியமை ஆகியவற்றால் ஆதரவாளர்கள் கொதிப்படைந்துள்ளனர்.

ஆகவே இந்த நெருக்கடியை சமாளிக்க பாலமுனை மாநாட்டில் மக்கள் வெள்ளத்தைக் காட்டுவதே ஹக்கீமுக்குள்ள ஒரே வழி! இதன் மூலம் இரண்டு விடையங்களை அவர் சாதிக்க நினைக்கிறார்.

நாட்டுத்தலைமைகளான ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முஸ்லிம்கள் என்னுடனேயே இருக்கின்றனர் எனக் காட்டுவது, அதன் மூலம் சுயலாபங்களை பெற்றுக்கொளவத்ற்கான வழிவகைகளுக்கு தயாராகின்றார்.

அடுத்தது, மக்களை அலை அலையாகக் கொண்டுவந்து அதிருப்தியாளர்களை அச்சுறுத்துவது.

இந்த விடையங்களைக் கையாள்வதற்காக அவர் பல்வேறு யுக்திகளை கையாண்டிருக்கின்றார்.

முஸ்லிம் பிரதேசங்களில் ஆட்களைக் கூலிக்கமர்த்தி பஸ்களின் மூலம் ஆட்களைக்கொண்டுவந்து ஆட்களை இறக்குவது. இதற்காக மட்டக்களப்பில் 40 பஸ்கள், வன்னியில் 8 பஸ்கள் திருமலையில் 20 பஸ்கள் கழுத்தறை, கம்பஹா, கொழும்பு ஆகியவற்றில் தலா 10 பஸ்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டுள்ளன.

பஸ்களை வாடகைக்கு அமர்த்தும் தரகர்களுக்கு தலா ரூ 17000 வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் புரியாணிப்பார்சல்களும் மர்ச்சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், டீ சேர்ட்டும் வழங்கப்பட்டுள்ளன. இதைவிட மாநாட்டில் கலந்து கொள்வோருக்கு இரகசியமான முறையில் பணமும் வழங்கப்பட்டுள்ளது. மாநாட்டு நிகழ்ச்சிகளை பிரபலப்படுத்தும் நோக்கில் விளம்பரங்களுக்காக ரூ 27 இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

அகதிகளுக்கோ, அனாதைகளுக்கோ விதவைகளுக்கோ இற்றைவரை எந்த உதவியும் செய்யாத இந்த சமூகக்கட்சித்தலைவர் தனது தலைமையைக் காப்பாற்ற கோடிக்கணக்கான பணங்களை வாரியிரைக்கின்றாரே? இந்தப்பணம் எங்கே இருந்து வந்தது என்று அதிருப்தியாளார்கள் குடையத்தொடங்கியுள்ளனர்.

Related posts

வவுனியா பொலிஸ் பொம்மைக்கு லஞ்சம் வழங்கிய நபர்

wpengine

அடக்கு முறைக்கெதிராக பல்கலைகழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

wpengine

நீர்கொழும்பில் வசித்த 13 அகதிகளில் யாழ்ப்பாணத்தில்

wpengine