உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

தமிழகத்தில் பரவி வரும் கோவிட் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், நாளை (வியாழக்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வரவுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நடைமுறைக்கு வரும் இந்த இரவு நேர ஊடரங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும் என அரசு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் பொழுதுபோக்கு பூங்காக்கள், கேளிக்கை பூங்காக்கள் அனைத்தும் செயற்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து கல்லூரிகள், தொழிற்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கும் ஜனவரி 20ம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது

wpengine

நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

Maash

சம்பூர் அனல் மின் நிலையம்! தொடர் மக்கள் போராட்டம்

wpengine