பிரதான செய்திகள்

தனியாரிடம் இரத்த பரிசோதனை செய்வதற்கு தடை

அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகின்ற நோயாளர்கள், தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையை எதிர்வரும் டிசெம்பர் மாதம் முதல் தடைசெய்யவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். 

இதற்கமைவாக, ஆய்வுகூடங்கள் இருக்கும் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இரத்த பரிசோதனை உபகரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சுகாதார அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளதாகவும்,

எனினும் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவரும் நோயாளிகள் தனியார் பிரிவுகளில் இரத்த பரிசோதனை செய்து கொள்வதை நிறுத்த முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மு.கா கட்சியின் பிரதி அமைச்சர் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு தொடர் அழுத்தம்

wpengine

விண்ணப்பம்! கல்வி அமைச்சு புதிய அறிவிப்பு

wpengine

தொப்பிகல மலையில் உல்லாச பயணிகள் மீது குளவித் தாக்குதல்

wpengine