பிரதான செய்திகள்

ஞானசாரவுக்கான நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக நீக்கம்

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த நீதிமன்றத் தடையுத்தரவு தற்காலிக அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல இன்று, தற்காலிக அடிப்படையில் தடையுத்தரவினை நீக்கியுள்ளார்.

ராஜகிரிய நாவல வீதியில் வீதிச் சோதனைச் சாவடியில் போதைப் பொருள் தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அச்சுறுத்தியதாகவும் ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எதிர்வரும் 6ம் திகதி முதல் 21ம் திகதி வரையில் ஜப்பானின் சுகுபா சம்போதி விஹாரையில் நடைபெறவுள்ள தர்ம உபதேச நிகழ்வில் பங்கேற்பதற்காக அனுமதிக்குமாறு ஞானசார தேரர், சட்டத்தரணிகள் ஊடாக கோரியிருந்தார்.

தற்காலிக அடிப்படையில் ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையை நீதிமன்றம் நீக்கியதுடன், அது குறித்து குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளருக்கும் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

Related posts

ரணில்,மைத்திரியின் 3வது அமைச்சரவை மாற்றம் முழு விபரம்

wpengine

பண்டாரவெளி காணியினை அரிப்பு கிராமத்திற்கு வழங்க பலரை தொடர்புகொள்ளும் மாந்தை பிரதேச செயலாளர் கேதீஸ்வரன்! பலர் கண்டனம்

wpengine

மன்னார், மாந்தையில் பௌத்த விகாரை! சட்டவிரோத மீறல் சிவகரன்

wpengine