பிரதான செய்திகள்

ஞானசாரதேரரின் விடுதலைக்காக ஜனாதிபதியுடன் பேசும் ஆசாத் சாலி

பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசாரதேரரின் விடுதலை தொடர்பில்  அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அவர்களிடம் உரையாடியுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்தார்.

பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசாரதேரரை வெலிக்கடை சிறைச்சாலையில் இன்று காலை சந்தித்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கொண்டவாறு ஆளுநர் தெரிவித்தார்.

நாட்டில் இடம்பெற்றதான தீவிரவாதச் செயற்பாடுகள் தொடர்பிலான தேரரினுடைய எதிர்வுகூறல்கள் சரியாக அமைந்நதெனவும் மேலும் குறிப்பிட்டார்.

தேரருடன் காணப்பட்ட மத ரீதியிலான வேறுபாடுகள் அவர் சிறை செல்லுவதற்கு முன்னதாகவே சுமுகமாக தீர்க்கப்பட்டதெனவும்,  தேசிய அபிவிருத்தியை  ஏற்படுத்திக் கொள்ள இரு சமுகத்தவர்களின் இணைப்புடன் குழுவொன்று  ஆரம்பிக்கப்படவிருந்த நிலையிலேயே ஞானசாரதேரரின் கைது இடம் பெற்றதெனவும் கூறினார்.

அனைத்து  வேறுபாடுகளையும் மறந்து ஒரே குடையின் கீழ் பணியாற்ற வேண்டியதான முக்கிய தருணம் இதுவென மேலும் கூறினார்.

பொதுப்பலசேனாவின் பொதுச் செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொட அத்தே ஞானசாரதேரரின் அறிக்கையை சிறைச்சாலை அமைச்சு ஜனாதிபதி செயலகத்திடம் 21 ஆம் திகதி சமர்ப்பித்தது.

தேரர் சிறையில் இருந்தபோது அவரது நடத்தை தொடர்பான விபரங்கள் அடங்கிய அறிக்கை ஜனாதிபதி செயலகத்தனால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையினுடைய பிரதி நீதி மற்றிம் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சிற்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் ஆதிவாசிகளின் கிரிக்கெட் போட்டி

wpengine

பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் சுப்ரமணியன் சுவாமி அவர்கள், இன்று என்னைச் சந்தித்தார்:

wpengine

பிரதேச செயலாளர்கள் வெளிமாவட்டத்தில் இருந்து வருகின்றவர்களை பரிசோதனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளவும்.

wpengine