Breaking
Sun. May 5th, 2024

சவுதி அரேபியாவின் விமானநிலையம் மீது இடம்பெற்ற ஆளில்லா விமானதாக்குதலில் இலங்கையர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

யேமனின் ஈரானுடன் இணைந்த ஹெளதி குழுவை எதிர்த்துப் போராடும் சவுதி தலைமையிலான கூட்டணி இதனை தெரிவித்துள்ளது.

யேமன் சவுதிஅரேபியா எல்லையிலுள்ள விமான நிலையமொன்றை இலக்கு வைத்து ஹெளதி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலின் போதே இவர்கள் காயமடைந்துள்ளனர்.

இரண்டு சவுதி பிரஜைகள் மற்றும் பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை சேர்ந்தவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியப் படையினர் வெடிமருந்து நிரப்பப்பட்ட ஆளில்லா விமானத்தை வானிலேயே வெடிக்க வைத்தனர். அதன் சிதறல்கள் காரணமாக இலங்கையர்கள் உட்பட 12 பேர்காயமடைந்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தங்களிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகக்காக பயன்படுத்தப்பட்ட விமானநிலையத்தை இலக்குவைத்ததாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *