பிரதான செய்திகள்

ஞான­சார தேரருக்கு எதி­ராக மூன்று முறைப்­பா­டுகள்! சட்டதரணி சிறாஸ் நுார்டீன்

பொது­ப­ல­சே­னாவின் பொதுச் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரருக்கு எதி­ராக ஆர்.ஆர்.ரி. அமைப்பு நேற்று பொலிஸ் மா அதி­ப­ரிடம் மூன்று முறைப்­பா­டு­களைச் சமர்ப்­பித்­துள்­ளது.
மூன்று முறைப்­பா­டு­களும் பொலிஸ் மா அதி­ப­ரினால் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­துடன் விரைவில் இம் முறைப்­பா­டுகள் தொடர்பில் ஞான­சார தேரர் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­ப­டுவார் என உறுதி வழங்­கப்­பட்­டுள்­ளது.

முறைப்­பா­டுகள் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­ட­மையை உறுதி செய்து கடி­தமும் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மஹி­யங்­க­னையில் பௌத்த கொடி எரிக்­கப்­பட்ட சம்­ப­வத்­தை­ய­டுத்து கடந்த 21 ஆம் திகதி அங்கு ஏற்­பாடு செய்­தி­ருந்த எதிர்ப்பு பேர­ணியில் கலந்­து­கொண்ட ஞான­சார தேரர் அங்கு ஆற்­றிய உரை தொடர்­பா­கவே இந்த மூன்று முறைப்­பா­டு­களும் செய்­யப்­பட்­டுள்­ளன.

மஹி­யங்­க­னையில் ஞான­சார தேரர் ஆற்­றிய உரை நீதியை நிலை நாட்டும் பொலி­ஸா­ருக்கு எதி­ராக சவால் விட்டும் அவர்­க­ளது கட­மையைச் செய்­வ­தற்கு தடை ஏற்­ப­டுத்தும் வகை­யிலும் அமைந்­துள்­ளது என ஒரு முறைப்­பாட்டில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அடுத்த முறைப்­பாட்டில் ஞான­சார தேரர் மஹி­யங்­க­னையில் பேசிய பேச்சில் அளுத்­கம சம்­ப­வத்தை நினைவு கூர்ந்­தி­ருக்­கிறார். பொலிஸார் உரிய நட­வ­டிக்கை எடுக்­கா­விட்டால் மஹி­யங்­க­னை­யிலும் அளுத்­க­மையில் ஏற்­பட்­டது போன்ற கல­வரம் ஏற்­படும் என எதிர்வு கூறி­யி­ருக்­கிறார்.

இது மிகவும் ஆபத்­தான பேச்­சாகும். அங்­குள்ள மக்­களை அளுத்­கம போன்ற கல­வ­ரத்­துக்கு தூண்­டு­வ­தாக அமைந்­துள்­ளது.

அத்­தோடு அளுத்­க­மையில் இடம்­பெற்ற கல­வ­ரங்­க­ளுக்கும் ஞான­சார தேரரின் உணர்ச்­சி­யூட்டும் பேச்சே காரணம் என களுத்­துறை நீதிவான் நீதி­மன்றில் வழக்கு தாக்கல் செய்­யப்­பட்டும் எந்­த­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மூன்­றா­வது முறைப்­பாடு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் ஞான­சார தேரரின் உரை அடங்­கிய ஒலி நாடாவை பொலிஸ் மா அதி­ப­ருக்கு அனுப்பி வைத்து அவ­ருக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி வேண்­டி­யதை அடுத்து தேரர் ஊட­கங்­க­ளிலும் வெளி­யிட்ட கருத்­துகள் இன முறு­கலைத் தோற்­று­விப்­ப­தாக அமைந்­துள்­ளன.

தனியார் தொலைக்­காட்சி சேவைக்கு அவர் வழங்­கி­யுள்ள பேட்­டி­யொன்றில் அல்­லாஹ்­வையும் நபிகள் நாய­கத்­தையும் குறிப்­பிட்டு சவால் விட்­டி­ருக்­கிறார். அடித்துக் கொள்­வ­தென்றால் அதற்கு நானும் தயார் என்று கூறி­யி­ருக்­கிறார். பௌத்த நாட்டில் தனது பேச்சை எவ­ராலும் தடை செய்ய முடி­யா­தென தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இவ்­வா­றான இவ­ரது பேச்­சுக்கள் நல்­லி­ணக்­கத்­துக்கு பாத­க­மாக இருக்­கின்­றன. இனங்­க­ளுக்கு இடையில் முரண்­பா­டு­களைத் தோற்­று­விப்­ப­தாக அமைந்­துள்­ளன எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த வெசாக் நோன்­மதி தினத்­தன்று மஹி­யங்­கனை பன்­ச­லையில் சமய பிர­சங்கம் நிகழ்த்­திய பௌத்த குரு ஒருவர் முஸ்­லிம்­களைப் பற்றி தவ­றான கருத்­து­களைத் தெரி­வித்­த­தை­ய­டுத்து முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் பௌத்த கொடியை எரித்­த­தை­ய­டுத்தே அங்கு எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தேகத்தின் பேரில் 8 முஸ்லிம் இளைஞர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை முஸ்லிம்களுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டியதன் சந்தேகத்தின் பேரில் 2 பெரும்பான்மை இனத்தவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

வவுனியா , ஓமந்தையில் போதை கலந்த இனிப்பு பண்டங்கள்

wpengine

அமைச்சர் றிஷாட்டின் ஏற்பாட்டில் பாணந்துறையில் பாடசாலை உபகரணங்கள்

wpengine

தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்- ஜனாதிபதி

wpengine