Breaking
Fri. May 3rd, 2024

முஸ்லிம்– சிங்கள நல்லிணக்கம் எனக்குப் புதிதானதல்ல. அது எனது குடும்பத்துடன் பின்னிப் பிணைந்தது. பரம்பரையாக என்னோடு வந்தது.

முஸ்லிம்களுக்கு  என்னால் தீங்கிழைக்கப்படமாட்டாது என்பதை உறுதியாக நம்புங்கள் என முன்னாள் ஜனா­தி­ப­தியும் குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மஹிந்த ராஜபக் ஷ தெரி­வித்தார்.

அளுத்­க­மையில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக நடை­பெற்ற வன்­செ­ய­லுக்­கான சதித் திட்டம் தீட்­டி­ய­வர்கள்,அதன் பின்­ன­ணியில் இருந்­த­வர்கள் யார் என்­பதை முஸ்­லிம்கள் வெகு­வி­ரைவில் அறிந்து கொள்­வார்கள் எனவும் அவர் கூறினார்.

நேற்று முன்­தினம் தெஹி­வளை– கல்­கிசை மேயர் தன­சிறி அம­ர­துங்க ஏற்­பாடு செய்­தி­ருந்த இப்தார் நிகழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யிலே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்;

‘அளுத்­கமை வன்­செ­யல்­க­ளுக்கு நான்தான் கார­ண­மென சிலர் பொய்ப்­பி­ர­சாரம் செய்­தார்கள். என்­மீது குற்றம் சுமத்தி என் பெயரை உலகம் முழு­வதும் பரப்­பி­னார்கள்.

இணையத் தளங்கள் மூலம் பொய்ப்­பி­ர­சா­ரங்­களை முன்­னெ­டுத்­தார்கள். இது பொய் என்­பதை முஸ்­லிம்கள் விரைவில் உணர்ந்து கொள்­வார்கள். அளுத்­கம சதியின் சூத்­தி­ர­தா­ரிகள் யார் என்­பதை அறிந்து கொள்­வார்கள்.

பலஸ்­தீ­னத்தில் முஸ்­லிம்­க­ளுக்கு அநீதி நடக்கும் போதெல்லாம் நான் அவர்­க­ளுக்­காக குரல் கொடுத்­துள்ளேன். பலஸ்­தீ­னத்தில் ஒரு பாதைக்கு எனது பெயரைச் சூட்­டி­யி­ருக்­கி­றார்கள்.

எங்­க­ளது உறவு அந்­த­ள­வுக்கு அர்த்­த­முள்­ளது. ஐக்­கிய நாடுகள் சபையில் முஸ்­லிம்­க­ளுக்­காக பல தட­வைகள் குரல் கொடுத்­துள்ளேன்.

முஸ்லிம் – சிங்­கள உறவு எனக்குப் புதி­தா­ன­தல்ல. எமது குடும்பம் முஸ்­லிம்­க­ளுடன் நெருங்­கிய உறவு கொண்­ட­தாகும். மெத­மு­லன யக்­கஸ்­முல்­லையில் முஸ்­லிம்­க­ளுக்­கென ஒரு கிரா­மத்தை அமைத்து வழங்­கி­யது எமது குடும்­பமே.

இந்த நல்­லி­ணக்க அர­சுக்கு முன்பே நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கி­ய­வர்கள். நல்­லி­ணக்க கூட்டு வாழ்க்கை வாழ்ந்­த­வர்கள் நாங்கள். இந்த இப்தார் நிகழ்வில் நாட்­டுக்கும் நாட்டு மக்­க­ளுக்கும் உங்­க­ளுடன் சேர்ந்து நானும் பிரார்த்­தனை செய்­கிறேன்’ என்றார்.

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் உரை­யாற்­று­கையில்;

‘தெஹி­வ­ளையில் முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களுடன் நல்லிணக்கத்துடன் வாழ்கிறார்கள். சமாதானத்தை விரும்புபவர்கள் முஸ்லிம்கள்.

அவர்களுக்கான பாதுகாப்பினை அரசாங்கம் வழங்க வேண்டும் என்றார்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *